Ruckus in JK Assembly on 08-Nov-2024 (Photo Credit: @ANI X)

நவம்பர் 08, ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், என்.சி.பி.டி.பி கூட்டணி வெற்றியடைந்து ஆட்சியை அமைத்துள்ளது. அம்மாநிலத்தில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு மக்களாட்சி நிறுவப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை (JK Assembly Meeting) கூட்டத்தொடரும் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா (Omar Abdullah), சபாநாயர் அப்துல் ரஹீம் ரத்தேர் தலைமையில் நடைபெற்று வருகிறது. Dengue Fever: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: டெங்கு காய்ச்சல்‌ கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்‌ அதிகரிப்பு.! 

மூன்றாவது நாளாக அமளி:

இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காஷ்மீரில் நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு பிரிவு 370 மீண்டும் வேண்டும் என ஆளுங்கட்சி சார்பில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அங்கு மாநில எதிர்க்கட்சியாக இருந்து வரும் பாஜக, இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. இதனால் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டுள்ளது.

மோதல் சம்பவம்:

இன்று குப்புவாரா தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ 370 வது பிரிவை மீட்டெடுக்க வேண்டி, பேனர் ஒன்றை கொண்டு வந்தார். இதனால் பாஜக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு குரலை எழுப்பிய நிலையில், அங்கு இருதரப்பு மோதல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, பாதுகாவலர்கள் களமிறங்கி எம்.எல்.ஏ., குர்ஷித் அகமது ஷேக்கை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த மோதல் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. தொடர் அமளியால் சட்டப்பேரவை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எம்.எல்.ஏக்கள் தாக்கிக்கொண்டதன் காணொளி: