அக்டோபர் 21, திருவள்ளூர் (Chennai News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, துராப்பள்ளம் பகுதியில் வசித்து வரும் தம்பதி சிலம்பரசன் - பிரியா. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவி பிரியாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சிலம்பரசன் சண்டையிடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் கணவன் - மனைவி ஒற்றுமையில்லாமல் வாழ்ந்து வந்த நிலையில், அவ்வப்போது தகராறு முற்றி பிரியா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும் பின் ஒரு மாதம் கழித்து சமாதானமாகி திரும்புவதுமாக இருந்துள்ளார். நாளைய வானிலை: தமிழகத்தில் விட்டு விளாசப்போகும் அதிகனமழை.. இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்.. அடுத்த 3 நாட்கள் உஷார்.!
மனைவியை கொன்று புதைத்த கணவன்:
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நடந்த தகராறில் ஆவேசத்தில் சிலம்பரசன் மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். தொடர்ந்து அவரின் சடலத்தை பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு ஏரிக்கரை அருகே புதைத்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பிரியா குறித்து கேட்கும்போதெல்லாம் அவர் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக சமாளித்தவர், விரைவில் வந்து விடுவார் என்றும் தெரிவித்து வந்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அவரது சகோதரர் சீனிவாசன் வீட்டிற்கு வந்து பிரியா குறித்து கேட்ட போது அவர் வெளியில் சென்று விட்டதாக கூறி சமாளித்துள்ளார்.
பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு அரங்கேற்றிய கொடூரம்:
சிலம்பரசனின் தடுமாற்றத்தை உணர்ந்த பிரியாவின் சகோதரர் சீனிவாசன் தனது சகோதரி மாயமானது குறித்து ஆரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சிலம்பரசனிடம் விசாரணை நடத்திய போது மனைவி மீது இருந்த நடத்தை சந்தேகத்தால் கழுத்தை நெறித்து கொன்று ட்ரம்மில் போட்டு புதைத்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து எளாவூர் ஏரிக்கரை பகுதியில் புதைக்கப்பட்ட பிரியாவின் உடலை தோண்டி எடுத்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஒரு நபரால் எப்படி கொன்று புதைத்திருக்க முடியும்? இந்த கொலையில் அவரது நண்பர்கள் யாருக்கும் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.