Daughter Mother Reunion: சூனியக்காரி என வெளியேற்றப்பட்ட தாய்: 10 ஆண்டுகள் வனவாசத்திற்குப்பின் தாய்-மகள் சந்திப்பு.. ஆனந்த கண்ணீர்..!

பாண்டிச்சேரியில் உள்ள ஆசிரமத்தில் வேலை பார்த்து தமிழ் கற்றுக்கொண்ட பெண்மணி, தனக்கு வாழ்க்கையில் நடந்த இருண்ட பக்கத்தினை தெரிவிக்க, அவரின் வாழ்வியல் ஒளியேற்றிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Mother - Daughter Relationship (Photo Credit: Pixabay)

ஜனவரி 12, புவனேஸ்வர் (Odisha News): ஒடிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், மயூர்பஞ்ச் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்று முடிந்து, அவர் தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதிகளுக்கு 2011ம் ஆண்டு குழந்தையும் பிறந்துள்ளது. இருவரும் மூவராக மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு பெண்ணின் கணவர் உயிரிழந்து இருக்கிறார்.

ஆசிரமத்தில் 10 ஆண்டுகள் வாழ்க்கை: இதனால் அவரை சூனியக்கார பெண் என முத்திரை குத்திய கணவரின் குடும்பத்தார், அவரை அங்கிருந்து விரட்டியடித்து இருக்கின்றனர். பெண்ணின் 3 வயது மகள் அங்கேயே இருந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி அங்கிருந்து புதுச்சேரி வந்து ஆசிரமம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரமத்தில் அனாதைபோல மனமுடைந்து வாழ்ந்து வந்த பெண்மணி, ஒருகட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது ஆசிரம உரிமையாளரிடம் உண்மையை கூறி இருக்கிறார்.

கருணை காண்பித்த அதிகாரிகள்: இந்த தகவலை கேட்டறிந்த ஆசிரம உரிமையாளர், சமூக வலைதளத்தின் வாயிலாக மயூர்பஞ்ச் காவல் துறை அதிகாரிகளுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். சமூக ஆர்வலர்களின் உதவியுடன் விபரம் பகிரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. 36 வயது பெண்ணின் மகள் குறித்து விசாரித்தபோது, தந்தையின் மரணத்திற்கு பின்னர் பெரியப்பாவின் கவனிப்பில் சிறுமி இருந்துள்ளார். Nethili Karuvadu Kuzhambu: மனமனக்கும் நெத்திலி கருவாடு குழம்பு செய்வது எப்படி?.. கருவாடின் நன்மைகள் என்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

கண்ணீருடன் சம்பவத்தை விவரித்த பெண்மணி: அப்போது சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விபரம் அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சிறுமி மீட்கப்பட்டு ஆசிரமத்தில் வசித்து வருவதும் உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்மணி தமிழ் மொழி பயின்று பாண்டிச்சேரியில் வாழ்ந்த பின்னரே தனது மகள் குறித்த விபரத்தை தெரிவித்து இருக்கிறார்.

2014ல் பிரிந்தவர்கள் 2024ல் இணைவு: ஆசிரம உரிமையாளர், காவல் துறையினர், தன்னார்வலர்கள் என பலரின் உதவியால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து பெண்மணி தனது மகளை நேரில் காண்கிறார். 3 வயது மகளை குடும்பத்தினரின் நடவடிக்கையால் தனியே விட்டுவந்த பெண்மணி, அவரை 13 வயதாகும் பெண்ணாக நேரில் கண்டு தாயும் - மகளும் ஆனந்த கண்ணீரில் நனைந்தனர். இந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.