ஜனவரி 12, சென்னை (Cooking Tips): இந்திய கலாச்சாரத்தில் உணவுப்பட்டியல் என்பதும் நீண்டுகொண்டே செல்லும். இந்த உணவுகள் இந்தியாவில் மாநிலவாரியாகவும், மாநிலத்தில் மாவட்ட வாரியகவும் பல்வகை பிரிவுகளாக இருக்கும். தென்னிந்திய உணவுகள், வட இந்திய உணவுகளை நேரடியாக இந்திய உணவுப்பட்டியலில் இரண்டு வகையாக பிரித்தாளும், அவற்றில் உள்ள உட்பிரிவுகள் எண்ணிலடங்காதவை. அந்தந்த தாய்மார்களின் கைப்பக்குவம், உள்ளூர் நீரின் சுவை, பக்குவம் என பலவகை காரணங்களை பொறுத்து அனைத்தும் மாறும். அந்த வகையில், இன்று நெத்திலி கருவாடு மீனின் பயன்கள் மற்றும் நெத்திலி கருவாடு குழம்பு செய்யும் முறைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
நெத்திலி கருவாடு (Nethili Karuvadu) நன்மைகள்: எண்ணெய் நிறைந்த மீன்களில் ஒன்றான நெத்திலியில் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் உள்ளன. இரத்தத்தில் உள்ள உடலுக்கு கேடான கொழுப்புகளை குறைக்கும் தன்மை நெத்திலிக்கு உண்டு. கண்பார்வை அதிகரிக்க, சரும பிரச்சனை நீங்க, கண்கள் பார்வைத்திறன் மேம்பட, பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெற, புற்றுநோயை தடுக்கவும் நெத்திலி உதவுகிறது. அதேபோல, குழந்தைப்பேறு அடைந்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் நெத்திலி உதவி செய்கிறது. Viral Video: கண்ணீருடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பெண் ஊழியர்... வைரலாகும் வீடியோ..!
கவனம் தேவை: நெத்திலி கருவாடை (Dry Anchovy Fish) எடுத்துக்கொள்ளும் போது அல்லது அதே நாளில் பிற இறைச்சிகளை உணவில் சேர்க்க கூடாது. மோர், தயிர், கீரை போன்றவற்றையும் சாப்பிட கூடாது. நெத்திலி கருவாடில் உப்புச் சத்து அதிகம் என்பதால், அதனை தினமும் அல்லது வாரம் 3 முறை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம். உயர் இரத்த அழுத்த பிரச்சனை, சர்க்கரை நோயாளிகள், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தவர்கள் நெத்திலி கருவாடு குழம்பை தவிர்க்கலாம். சிலருக்கு சரும அலர்ஜி ஏற்படும். அவர்களும் நெத்திலி கருவாடை தவிர்ப்பது நல்லது.
நெத்திலி கருவாடு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 300 கிராம்,
கத்தரிக்காய் - 1/2 கிலோ,
முருங்கைக்காய் - 3,
பச்சை மிளகாய் - 5,
தக்காளி நறுக்கியது - 3,
புளி - எலுமிச்சை அளவு,
வெந்தயம் - 1 கரண்டி,
கடுகு - 1 கரண்டி,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
எண்ணெய் & உப்பு - தேவையான அளவு. US and UK Strike Back at Several Houthi Sites: செங்கடலில் போர் மேகம்... ஹவுதி மீது அமெரிக்கா கடும் தாக்குதல்..!
மசாலாவுக்கு:
சிறிய வெங்காயம் (தோல் உரித்து இரண்டாக நறுக்கியது அல்லது நறுக்காதது) - 350 கிராம்,
மல்லித்தூள் - 75 கிராம்,
சீரகம் - 1 கரண்டி,
மிளகு - 2 கரண்டி,
காய்ந்த மிளகாய் - 4,
பூண்டு பற்கள் - 8 முதல் 10,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
தேங்காய் - கால் கிண்ணம்.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட நெத்திலி கருவாடை மிதமான சூடுள்ள நீரில் நீரில் 5 - 10 நிமிடம் ஊறவைத்து, நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். நெத்திலி கருவாடின் தலைப்பகுதியை கிள்ளி எடுத்தால், ஊறவைத்த பின் கருவாடின் குடல் பகுதிகள் தலையுடன் தனியே வரும். சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில் குழம்பு கசப்பு சுவையாக இருக்கும். Tamil Nadu Weather Report: விடைபெறும் வடகிழக்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
பின் எடுத்துக்கொண்ட கத்தரிக்காய், முருங்கை, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். புளியை நீரில் ஊறவைத்து, அதனை கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாணெலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் காய்ந்த மிளகாய், வெங்காயம், மல்லித்தூள், சீரகம், பூண்டு, மிளகு, கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இவை ஆறியதும் அம்மியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவை தயாரானதும் வாணெலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பில்லை, பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். தாளிப்பு முடிந்ததும் தக்காளி, கத்தரிக்காய், முருங்கை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்ந்து வதக்கி வேகவைக்க வேண்டும். காய்கறிகளின் மீது சிறிதளவு உப்பை தூவிக்கொள்ளவும்.
காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். அப்போது உப்பு, காரம் ஆகியவற்றை சோதித்துவிட்டு, உங்களின் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ள வேண்டும். புளியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். புளி சேர்த்த பின்னர் குழம்பு கொதிக்கத்தொடங்கும். நன்கு கொதிவந்ததும் நெத்திலி கருவாடை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான நெத்திலி கருவாடு குழம்பு தயார்.
குறிப்பு: கருவாடு குழம்பை கெட்டியான பத்துடன் வைப்பதே சுவையாக இருக்கும். அதேபோல, கருவாடு குழம்பு செய்த ஒருநாள் கடந்து அதனை சுவைப்பது உணவு ருசியின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தும். அதனை நினைத்தாலே நாவெல்லாம் எச்சில் வெள்ளமாக ஊறுகிறது.
நினைவில் கொள்க: அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.