MGR 107th Birth Anniversary: தமிழ் மக்களின் இதயத்தில் இருந்து நீங்கா இதயக்கனி.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி ட்விட்.!

எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளத்தில் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

PM Modi & MGR (Photo Credit - @RavinderKapur2 @ggowrishankarr X)

ஜனவரி 17, டெல்லி (Delhi): தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனவரி 17, 1917 முதல் டிசம்பர் 24, 1987 வரை நீடித்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, இந்திய அரசியலிலும் சினிமாவிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

திரை பயணத்தின் ஆரம்பம்: எம்ஜிஆர் தனது சிறு வயதிலேயே நடிப்பின் மீதும் மிகவும் ஆர்வமாக இருந்தார். எனவே தன்னை நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார். அவருடைய சிறு வயதில் தந்தை இறக்கிறார். இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை எம்ஜிஆர்க்கு ஏற்படுகிறது. பணம் சம்பாதிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார். அதனைத் தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார். பின்னர் நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். Coronavirus Strain Attacks BRAIN: மூளையை தாக்கி அழிக்கும் ஆபத்தான வைரஸ் மாதிரிகளை உருவாக்கும் சீன விஞ்ஞானிகள்: மீண்டும் பதறவைக்கும் தகவல்.!

1936ல் சதிலீலாவதி என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். ஆனால் 1940க்கு பின் தான் அவருக்கு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. 1947ல், இராஜகுமாரி திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அப்படத்தில் ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்திய எம்ஜிஆர் தொடர்ந்து தமிழ் திரை உலகை மூன்று சகாப்தங்களுக்கு ஆண்டார்.

அரசியல் வாழ்க்கை: 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன், 1952ல் பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார். அதுமட்டுமின்றி திமுகவிற்காக பல தேர்தல் பிரச்சாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தொடர்ந்து அக்கட்சியில் பொருளாளர் வரை பதவி உயர்வுபெற்றார். அண்ணாவின் மறைவுக்குப் பின், திமுகவுக்கு தலைமையேற்ற கருணாநிதியிடம் இருந்து கட்சியின் நிதி குறித்து கணக்குக்கேட்ட விவகாரத்தில் அக்கட்சியிலிருந்து 1972ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். அதன் பின்னர் அதிமுக கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். Man Stuck In Loo For Entire Flight: விமான பயணத்தில் மரண பயத்தை எதிர்கொண்ட பயணி: கழிவறை கதவுகள் பூட்டிக்கொண்டதால் பீதி..!

1977 ஆம் ஆண்டு தமிழகச் சட்ட மன்றத் தேர்தலில் பங்கேற்று பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றார். அன்றைக்கு ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்தவர் தனது இறப்பு வரையில் தொடர்ந்து முதலமைச்சராகவே நீடித்தார். அது மட்டும் இன்றி அரசியலில் பல திட்டங்களை கொண்டு வந்தவர். சத்துணவு திட்டம், இலவச சீருடை திட்டம், இலவச மின்சாரத் திட்டம், பெண்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார். பாமர மக்களின் வாழ்வில் செல்வாக்கை பெற்ற எம்.ஜி.ஆர் மக்கள் திலகம், புரட்சி தலைவர் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டார்.

எம்ஜிஆர் மறைவு: எம்ஜிஆர், கடந்த 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி உடல்நல குறைவால் மறைந்தார். அவரது உடலுக்கு மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே மரியாதை செலுத்தப்பட்டு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. Narrowly Escape From Death: அலட்சியமாக இரயில்வே தண்டவாளத்தை கடந்த நபர்; நூலிழையில் உயிர்தப்பிய பதைபதைப்பு காட்சிகள் உள்ளே.!

மோடியின் பதிவு: இந்நிலையில் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளத்தில் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு தலைவராகவும் இருந்தார். அவரின் படங்கள், குறிப்பாக சமூக நீதி குறித்த கருத்துகள் வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன. தலைவராக, முதல்வராக அவர் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர். தமிழகத்தின் வளர்ச்சியில், மேம்பாட்டில் நீங்காத தடம் பதித்தவர். அவருடைய பணிகள் இன்றளவும் நம்மை ஊக்குவிக்கக் கூடியவை."‌ என்று குறிப்பிட்டுள்ளார்.