Corona Virus (Photo Credit: Pixabay)

டிசம்பர் 17, பெய்ஜிங் (Beijing): கடந்த 2019 முதல் சீனாவில் உள்ள உகான் நகரில் பரவி வந்ததாக கூறப்படும் கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை, 2020க்கு பின் உலக நாடுகளுக்கு சீனா தெரிவித்தது. இந்த வைரஸ் பரவல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சீனா மீது முன்வைக்கப்பட்ட நிலையில், உகானில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலேயே இந்த வைரஸ் தயாரிக்கப்பட்டு தவறுதலான பயன்பாடு காரணமாக மக்களிடையே அது பரவியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தது.

சீனா உண்மையுடன் செயல்படவில்லை என அமெரிக்கா குற்றச்சாட்டு: இதற்கு மறுப்பு தெரிவித்த சீனா முதலில் தனது நகர சந்தையிலிருந்து பெண்ணுக்கு பரவிய வைரஸ், அதனை தொடர்ந்து பரவியதாக கூறி பின்னாளில் அது எங்களிடம் இருந்து பரவவே இல்லை என வேறொரு நாட்டின் மீது குற்றசாட்டை முன்வைத்தது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா உலக நாடுகளுக்கு உண்மையாக இல்லை என அமெரிக்கா தொடக்கத்திலேயே தனது காட்டமான குற்றசாட்டை அதிரடியாக முன்வைத்து இருந்தது. Man Stuck In Loo For Entire Flight: விமான பயணத்தில் மரண பயத்தை எதிர்கொண்ட பயணி: கழிவறை கதவுகள் பூட்டிக்கொண்டதால் பீதி..! 

3 அலைகளில் சிக்கி தவித்த உலகம்: சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா, உலக நாடுகளிடையே பரவி பல நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. அமெரிக்காவில் 1 கோடிக்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர். கொரோனவும் அந்தந்த நாடுகளுக்கேற்ப தன்னை தகவமைத்து பரவியது. 3 பெரும் அலைகளில் உலக நாடுகள் சிக்கித்தவித்தன. தடுப்பூசி பயன்பாடுக்கு பின் கொரோனா பரவலின் வேகம் என்பது குறைந்தது.

மீண்டும் அதிர்ச்சி தகவல் வெளியானது: இந்நிலையில், சீனாவில் உள்ள ஆய்வாளர்கள் புதியதாக கொரோனா வைரஸ் மாதிரிகளை வைத்து வேறொரு வைரஸ் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இது எலிகளின் மூளையை தாக்கி 100 விழுக்காடு மரணத்தை ஏற்படுத்தும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு முன்பு சார்ஸ் கோவிட் இரண்டாவது ரகத்திலிருந்து மூலக்கூறு பிணைப்புகள் அனைத்தும் மாற்றப்பட்டு இந்த புதிய வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எலிகளின் மூளையை தாக்கி கொல்லும் புதியரக கொரோனா, மனிதர்களுக்கு பரவுமா? என்ற அச்சமும் மீண்டும் ஏற்பட்டுள்ளது.