Samvidhan Sadan: பழைய நாடாளுமன்றத்திற்கு புதிய பெயர் வைத்த பிரதமர் மோடி: அரசியல் சாசன அவை.!

96 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்றம் தற்போதைய தேவைகளுக்கு போதாத காரணத்தால், கூடுதல் வசதிகளோடு புதிய நாடாளுமன்றம் கட்டமைக்கப்பட்டது.

Samvidhan Sadhan (Photo Credit :Twitter)

செப்டம்பர் 20, புது டெல்லி (Political News): நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தை பெருமைப்படுத்தும் விதமாகவும், அதற்கு பிரியாவிடை அளிக்கும் வகையிலும் பிரதமர் மோடி நேற்று மைய மண்டபத்தில் உரையாற்றினார்.

“இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில், நம் தேசத்தை வளர்ந்த நாடாக மாற்றும் உறுதியோடும் தீர்மானத்தோடும் நாம் புதிய கட்டிடத்திற்குள் அடி எடுத்து வைக்கப் போகிறோம். இந்த அவையில் தான் அரசியல் சாசனம் பிறந்தது. இந்த மைய மண்டபத்தில் தான் முதன்முதலாக, நம் நாட்டின் தேசியக்கொடி சுடர்விட்டு பறந்தது, நம் தேசிய கீதம் ஒலித்தது. ICC Men’s T20WorldCup 2024: அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் போட்டிகள்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

கடந்த 70 ஆண்டு காலமாக மக்களவையும், மாநிலங்களவையும்  கிட்டத்தட்ட  4000 சட்டங்களை  நிறைவேற்றி இருக்கின்றன. இந்த அவையில் இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களும், விவாதங்களும் எடுக்கப்பட்ட முடிவுகளும் இந்தியாவின் உயர்ந்த லட்சியங்களை ஊக்குவிக்கும் விதமாக எப்போதும் இருக்கும்.

இந்த அவையின் பெருமை என்றென்றும் நிலைத்திருக்க என்னிடம் ஒரு ஆலோசனை இருக்கிறது. இதை பழைய கட்டிடம் என்று அழைப்பதற்கு பதிலாக அரசியல் சாசன அவை (Samvidhan Sadan) என்று அழைக்க அனுமதிக்கும்படி மக்களவை சபாநாயகரிடமும், மாநிலங்களவை தலைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் சாசன அவை என்று அழைக்கும் போது இங்கே பங்குபெற்ற சிறந்த தலைவர்களை நாம் எப்போதும் நினைவு கூற முடியும். இந்த வேண்டுகோள் பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறேன். அரசியல் ஆதாயத்தை தாண்டி அரசியல் கட்சிகள் நாட்டின் எதிர்காலத்திற்காக சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.” என்று கூறி தன் உரையை முடித்தார்.