India Elections 2024 Phase 6: இந்தியத் தேர்தல்கள் 2024: விறுவிறுப்புடன் நடைபெறும் 6ம் கட்ட வாக்குப்பதிவு; திரளாக வாக்களிக்கும் மக்கள்.!
அதன் தரவுகளை விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
மே 25, புதுடெல்லி (New Delhi): உலகமே உற்றுநோக்கும் இந்திய மக்களவைத் தேர்தல் 2024 ஐந்து கட்டங்களை நிறைவுசெய்து, இன்று (மே 25, 2024) ஆறாம்கட்ட தேர்தலை நோக்கி பயணித்துள்ளது. இன்று காலை 7 மணிமுதல் தேர்தல் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. 58 தொகுதிகளில் இன்று நடைபெறும் மக்களவை தேர்தலில், மொத்தமாக 889 வேட்பாளர்கள் மக்களின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். Vivo S19 Series: விவோ S19 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் சீனாவில் விரைவில் அறிமுகம்..! அதிகாரபூர்வ அறிவிப்பு தேதி வெளியீடு..!
மாநில வாரியாக விபரம்: பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகள், ஹரியானா மாநிலத்தில் 10 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்திரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தமாக 58 தொகுதிகளில் இந்தியத் தேர்தல்கள் 2024 நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஒரேகட்டமாக ஜூன் 04ல் வெளியாகிறது. Job Crisis At IITs: ஐஐடியில் வேலை நெருக்கடி.. 7000 மாணவர்கள் வேலையில்லாமல் தவிப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
8.93 இலட்சம் வாக்காளர்கள் வயது மூத்தவர்கள்: அதேபோல, இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 11.13 கோடி வாக்காளர்கள், 1.14 இலட்சம் வாக்குச்சாவடி மையங்கள், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது. 5.84 கோடி ஆண் வாக்காளர்கள், 5.29 கோடி பெண் வாக்காளர்கள், மற்றும் 5120 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்குகளை செலுத்துகின்றனர். இவர்களில் 8.93 இலட்சம் வாக்காளர்கள் 85 வயதை கடந்தவர்கள், 23,659 பேர் 100 வயதை கடந்தவர்கள் ஆவார்கள்.
இந்த தேர்தலில் பாஜக டெல்லி கிழக்கு தொகுதியின் எம்.பியும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பிர் தனது வாக்குகளை பதிவு செய்தார்.