Vivo S19 Series (Photo Credit: @saaaanjjjuuu X)

மே 24, சென்னை (Technology News): விவோ நிறுவனம் அதன் S19 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான விவோ S19 (Vivo S19) மற்றும் விவோ S19 ப்ரோ (Vivo S19 Pro) ஆகியவற்றின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. இவை வருகின்ற மே 30-ஆம் தேதி அன்று, சீனாவில் மாலை 7 மணியளவில் (இந்திய நேரம் இரவு 9:30 மணி) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், கேமரா திறன் மற்றும் Pro மாடலின் டிசைன் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை விவோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. வெய்போவில் (Weibo) வெளியான டீசர் வீடியோவில், பின்புற டிசைனின் ஒரு சிறிய பகுதியில் "Aura Light OIS Portrait" என்று பெயரிடப்பட்ட புதிய "soft ring light" அம்சத்தை இது குறிக்கிறது. Olive Oil Benefits: ஆலிவ் எண்ணெயில் உள்ள பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

சிறப்பம்சங்கள்:

விவோ S19 ப்ரோ மூன்று லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் முதன்மை சென்சார் 50MP சோனி IMX921 சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50x டிஜிட்டல் ஜூம் கொண்ட 50MP சோனி IMX816 டெலிஃபோட்டோ யூனிட் மற்றும் மூன்றாவது 50MP சென்சார் செல்பி கேமரா உள்ளது.

விவோ S19 சீரிஸில் வெவ்வேறு டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. விவோ S19 மாடல் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட, 6.78-இன்ச் பிளாட் OLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ S19 Pro மாடல், அதே ரெப்ரெஷ் ரேட் கொண்ட வளைந்த-எட்ஜ் OLED திரையை கொண்டுள்ளதாக தெரிகிறது.

S19-யில் பிளாஸ்டிக் பிரேம் மற்றும் Pro மாடலுக்கு மிகவும் பிரீமியம் டிசைன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக இதன் முழு தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.