Doda Election Result 2024: ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு.. தோடா சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி..!
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தோடா சட்டமன்றத் தொகுதியில் மெஹ்ராஜ் மாலிக் வெற்றி பெற்றார்.
அக்டோபர் 08, புதுடெல்லி (New Delhi): ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில், மாநிலங்களவை தேர்தல்கள் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்தன. அக்.08ம் தேதியான இன்று இரண்டு மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக், மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இது 2014 சட்டமன்றத் தேர்தலில் பதிவான 65.52 சதவீதத்தை விட சற்று குறைவாகவே இருந்தது. Vinesh Phogat Victory: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் 2024: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அமோக வெற்றி.. கொண்டாட்டத்தில் காங்கிரஸ்.!
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது. இதில் தோடா சட்டமன்றத் தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) ஜம்மு காஷ்மீரில் வெற்றி பெற்று பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் பாஜகவின் கஜய் சிங் ராணாவை தோற்கடித்தார்.