Vinesh Phogat (Photo Credit: @YadavRicke95671 X)

அக்டோபர் 08, ஜூலானா (Haryana News): ஹரியானா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பு பெற்றுள்ளது. 90 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனித்துப் போட்டியிட்டு 50 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, எஞ்சிய கட்சிகள் 5 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பாஜக ஆட்சி அங்கு உறுதியாகியுள்ள காரணத்தால், எஞ்சிய சுயேச்சை உட்பட பிற வேட்பாளர்களை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

வினேஷ் போகாத வெற்றி:

இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறை பாஜக ஆட்சியை ஹரியானா மாநிலத்தில் நிறுவியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக சைனி தொடருகிறார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஜூலானா தொகுதியில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (Vinesh Phogat) வெற்றி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் இரண்டாவது இடத்தையும், இந்திய தேசிய லோக் தளத்தின் வேட்பாளர் சுரேந்தர் லாஹர் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் தான் வினேஷ் போகத் முதல் முறையாக தனது வாக்குகளையும் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளார். Jammu Kashmir Election Results 2024: ஜம்மு காஷ்மீரில் வெற்றிக்கொடியை நாட்டுகிறது காங்கிரஸ்? தொடர்ந்து முன்னிலை... விபரம் உள்ளே.! 

பிரிட்ஜ் பூஷன் விவகாரம்:

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், சமீபத்தில் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு 100 கிராம் எடை பிரச்சனையில் பதக்கத்தை தவறவிட்டு தாயகம் திரும்பினார். ஆனால், அவருக்கு மக்களின் தன்னம்பிக்கை பதக்கம் கிடைத்து, அரசும் அவருக்கு பதக்கம் பெற்றவருக்கான மரியாதையை வழங்கி இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக வினேஷ் போகத் உட்பட பிற மல்யுத்த வீரர்கள், மல்யுத்த சம்மேளனத் தலைவர் & பாஜக நிர்வாகியாக இருந்து வந்த பிரிட்ஜ் பூஷன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் எந்த விதமான நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை.

மக்கள் அங்கீகாரம்:

இதனால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பின் இந்தியா வந்தவர், ஹரியானா சட்டசபை தேர்தலை தனக்கான முகமாக மாற்றிக்கொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வினேஷ் போகத் காங்கிரசை தேர்வு செய்தது, அக்னி பாத் திட்டத்தை அறிமுகம் செய்தது என பாஜக ஹரியானா மாநில அரசியலில் பரபரப்பு உண்டாகி அங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பாஜகவே அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.

வெற்றிபெற்ற வினேஷ் போகத் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார், காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடுகின்றனர்: