BJP Subramanian Swamy Criticize PM Modi: பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவு.. சாடிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.. நடந்தது என்ன?
பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவை புறக்கணிக்கும் விதத்தில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிலளித்துள்ளார்.
cபிப்ரவரி 13, புதுடெல்லி (New Delhi): பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இன்று காலை டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சென்றார். அவர் பிப்ரவரி 13 முதல் 14 வரை இரண்டு நாட்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பார். அதைத் தொடர்ந்து அவர் தோஹா செல்லவுள்ளார்.
இந்நிலையில் கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் 8 கடற்படை அதிகாரிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட்டது அவர்கள் குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விடுவிக்கப்பட்ட கடற்படை அதிகாரிகள் 8 பேரில் 7 பேர் டெல்லி திரும்பினர். ஒருவர் இன்னும் இந்தியா திரும்பவில்லை. அவரும் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மகிழ்ச்சி தருணத்திற்கு பின் கத்தார் சென்ற பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினைப் போட்டுள்ளார். Ajith Kumar Pays Last Respects To Vetri Duraisamy: வெற்றி துரைசாமியின் மரணம்.. நேரில் சென்று இரங்கல் தெரிவித்த தல அஜித்.. வைரலாகும் வீடியோ..!
அந்த பதிவில், "அடுத்த இரண்டு நாட்களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுடன் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நான் செல்கிறேன். பதவியேற்ற பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏழாவது முறையாக செல்கிறேன். வலுவான இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்புக்கு நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்திக்க ஆவலாக உள்ளேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் இந்து மந்திரை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைக்க உள்ளது. அபுதாபியில் நடக்கும் சமூக நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடமும் உரையாற்றுவேன். மேலும் நான் உச்சி மாநாட்டில் பேச உள்ளேன், பின்னர் துபாயில் ஷேக் முகமதுவை சந்திக்கிறேன். தமீம் பின் ஹமத் அல் தானியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன், அவரின் தலைமையில் கத்தார் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த பதிவை தாக்கும் விதமாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி (BJP Subramanian Swamy) அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினைப் போட்டுள்ளார். அந்த பதிவில், "MEA மற்றும் NSA கத்தாரின் ஷேக்குகளை கடற்படை வீரர்கள் விடுதலைக்கு வற்புறுத்தத் தவறியதால், மோடி, சினிமா நட்சத்திரமான ஷாரூக் கானை தன்னுடன் கத்தாருக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கானிடம் இந்த விஷயத்தில் தலையிடுமாறு மோடி வேண்டுகோள் விடுத்தார், அதனால் கத்தார் ஷேக்களிடமிருந்து நமது கடற்படை அதிகாரிகள் விடுவிக்க தீர்வு கிடைத்தது." என்று குறிப்பிட்டுள்ளார்.