Mann Ki Baat: பாரதியின் பொன்மொழிகளை நினைவில் கொண்ட பிரதமர் மோடி.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பெண்களுக்காக அதிரடி பேச்சு.!
பெண்களுக்கான சமபங்கு வாய்ப்புகளை வழங்கி அடையும் முன்னேற்றமே, உலகளவில் சிறந்த முன்னேற்றத்தை வழங்கும் என பிரதமர் கூறினார்.
பிப்ரவரி 25, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியமைத்து இருக்கும் நிலையில், மூன்றாவது முறையும் ஆட்சியை கைப்பற்றிட வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. கடந்த 2 முறை ஆட்சியை பிடிக்க வழியில்லாமல் திணறி வரும் காங்கிரஸ், இந்த முறை ஆட்சியை பிடித்திட வேண்டும் என ராகுல் காந்தியின் தலைமையில் பாரதிய யாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
மனதின் (Maan Ki Baat) குரல் நிகழ்ச்சி இன்று: அரசியல் செயல்பாடுகள் ஒருபுறம் விறுவிறுப்பு பெற்றாலும், அரசு தொடர்ந்து மக்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து மக்களிடையே மாதத்தின் இறுதி வாரங்களில் "மான் கி பாத்" (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் வாயிலாக வானொலியில் பேசி வருகிறார். US Indian Died: தீ விபத்தில் சிக்கி அமெரிக்காவில் 27 வயது இந்திய இளைஞர் உயிரிழப்பு; பத்திரிகை துறையில் பணியாற்றியவருக்கு நடந்த சோகம்.!
பாரதியாரின் பொன்மொழியை நினைவில் கொண்ட பிரதமர்: அதன்படி, பிப்ரவரி மாதம் 25ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான இன்று 110வது "மான் கி பாத்" உரை நிகழ்த்தப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, "வரும் மார்ச் மாதம் 08ம் தேதி நாம் மகளிர் தினத்தை சிறப்பிக்கவுள்ளோம். இந்த நாள் நாட்டின் வளர்ச்சிப்பயணத்தில் பெண்களின் சக்தி மற்றும் பங்களிப்பை போற்றும் வகையிலான வாய்ப்பை வழங்குகிறது. பெண்களுக்கு சமவாய்ப்பு கிடைப்பதே உலகம் செழிப்புக்கு வழிவகை செய்யும் என கவிஞர் பாரதியார் கூறி இருக்கிறார்.
கிராமப்புறத்தில் தொழில்நுட்பம் ஊக்குவிப்பு: இந்தியாவில் நமது அரசு அறிமுகம் செய்த நாரி சக்தி திட்டம், ஒவ்வொரு துறையிலும் பெண்களை உட்புகுத்தி, அவர்களின் முன்னேற்றத்திற்கான புதிய உச்சத்தை அடைய வழிவகை செய்துள்ளது. கிராமத்தில் இருக்கும் பெண்களும் ஆளில்லாத விமானங்களை பறக்கவிடுகிறார்கள். அவர்கள் நினைத்து பார்க்காத விஷயங்களில் இன்று கவனம் செலுத்தி வெற்றி அடைகிறார்கள். கிராமப்புற சகோதரிகள் தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டு விவசாயத்தை ஊக்குவிக்க ட்ரான் திதி (Drone Didi) மிகவும் பயன்படுகிறது.