Fazil Khan (Photo Credit: @TimesNow X)

பிப்ரவரி 25, நியூயார்க் (World News): அமெரிக்காவில் உள்ள நியூயார்க், ஹார்லெம் பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பசில் கான். இவர் தனது குடும்பத்தினருடன் வசிக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இவரின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகினர். இவரின் மறைவை உறுதி செய்த குடும்பத்தினர், அரசுக்கு தகவலை தெரியப்படுத்தினர். Train Starts Travel Without Pilot: திரைப்படத்தை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்.. ஓட்டுநர் இல்லாமல் 100 கி.மீ வேகத்தில் பயணித்த சரக்கு இரயில்... விபரம் உள்ளே.! 

இளம் பத்திரிகையாளர் மரணம்: 27 வயதான இளைஞர் பசில் கான், ஊடகத்துறையில் பணியாற்றுவதற்கு பயின்றுவிட்டு அகதிகள் மறுவாழ்வு நிலைகள் குறித்த விபரங்களை சேகரித்து வழங்கும் பத்திரிகையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்தியாவில் அவர் சிஎன்என், நியூஸ் 18 உட்பட பல நிறுவனங்களில் முதன்மை நிறுவனத்தில் வேலை பார்த்து இருக்கிறார். Smoke Shortflix Movie: இளவயதில் அவள் சந்தித்த கொடுமைகள்.. படமாகிறது பிரபல தமிழ் நடிகையின் வாழ்க்கை.. அசத்தல் விபரம் இதோ.! 

இந்திய தூதரகம் இரங்கல்: அமெரிக்காவில் ஊடகத்துறையில் மேற்படிப்பு பயின்றவர், தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்துள்ளார். அப்போதுதான் அவரின் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு, அதில் சிக்கி பசில் பலியாகி இருக்கிறார். இவரின் மறைவுக்கு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் இந்திய தூதரக அதிகாரிகளும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருக்கின்றனர்.