PM Modi Dwarka Visit: நனவாகிய பிரதமர் மோடியின் கனவு - துவராகவில் நேரடி தரிசனம் செய்த பிரதமர்..!

அவரின் செயல் நெகிழ்ச்சியை தந்துள்ளது.

PM Modi Visit Dwaraka (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 26, துவாரகா (Gujarat News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்திற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு, அங்கு பல்லாயிரக்கணக்கான கோடி செலவில் அமைக்கப்பட்ட நலத்திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தவர், கூடுதல் அரசு திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, நேற்று மாலை கிருஷ்ணர் வாழ்ந்து கடலால் மூழ்கிய பகுதியாக கருதப்படும் துவராகவுக்கு தனது பாதுகாப்பு படையினருடன் படகில் சென்றார். Google Pay Stopped Service: ஜூன் 4ம் தேதி முதல் தனது சேவையை நிறுத்துவதாக கூகுள் பே அறிவிப்பு; காரணம் என்ன?.. விபரம் இதோ.!

ஆன்மீக சிந்தனை: அங்கு பஞ்ச்குய் கடற்கரையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் நீருக்குள் மூழ்கி, துவாரகா இருந்த பகுதியில் பிரார்த்தனை செய்தார். மயில் இறகுதான் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, மயில் இறகை அங்கேயே கிருஷ்ணருக்கு வழங்கும் வகையில் மண்ணில் வைத்துவிட்டு வந்தார். ஆன்மீக சிந்தனை மற்றும் ஈடுபாடு கொண்ட பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின்போது விரதம் இருந்து கும்பாவிஷேக பணிகளை மேற்கொண்டு வந்தார். Mann Ki Baat: பாரதியின் பொன்மொழிகளை நினைவில் கொண்ட பிரதமர் மோடி.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பெண்களுக்காக அதிரடி பேச்சு.! 

பல ஆண்டுகால கனவு: துவாரகா சென்றது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கிருஷ்ணரின் புனித பூமியை நேரில் கண்டத்தில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகால கனவு நினைவாகி இருக்கிறது" என குறிப்பிட்டார்.