பிப்ரவரி 25, நியூயார்க் (Technology News): அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், ரஷ்யா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் கூகுள் பே செயலி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் 67 மில்லியன் பயனர்கள் கூகுள் பே செயலியை பயன்படுத்துகின்றனர். சிறிய அளவிலான கடைகள் முதல் பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் வரை கூகுள் பே பயன்படுவதால், மக்களும் தொடர்ந்து அதனை உபயோகம் செய்கின்றனர். கூகுள் பே வாயிலாக பயனரின் செல்போன் நம்பரை வைத்து பணம் அனுப்பும் நடைமுறை முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வாலட் முறையில் நமது பணத்தை சேமித்து வைத்துக்கொண்டு, தொலைத்தொடர்பு இல்லாத சூழலிலும் எவ்வித ரகசிய எண்ணையும் பகிராமல் பணம் அனுப்பும் நடைமுறை தற்போது அறிமுகமாகியுள்ளது. தொடர்ந்து பல புதிய அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. Mann Ki Baat: பாரதியின் பொன்மொழிகளை நினைவில் கொண்ட பிரதமர் மோடி.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பெண்களுக்காக அதிரடி பேச்சு.!
கூகுள் பே செயல்பாடுகள் நிறுத்தம்: இந்நிலையில், அமெரிக்காவில் கூகுள் பே தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அங்குள்ள மக்கள் கூகுள் பே வாலட்-ஐ அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் கூகுள் பே-வின் தேவை கணிசமாக குறைந்து இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் மட்டும் கூகுள் பே செயல்பாடுகளை நிறுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது. ஜூன் 4ம் தேதிக்கு மேல் கூகுள் பே செயல்பாடுகள் நிறுத்தப்பட்டாலும், மக்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்த எவ்வித பிரச்சனையும் இல்லை. பிற நாடுகளில் கூகுள் பே தனது வழக்கமான பயன்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் கூகுள் பே உபயோகம் செய்யும் பயனர்களுக்கு சோகத்தை தந்துள்ளது.