President’s Medal Awards 2024: சுதந்திரத்தினத்தில், குடியரசுத்தலைவரின் விருதுகளை பெரும் 23 தமிழக காவலர்கள்; லிஸ்ட் இதோ.!
காவல்துறையில் மெச்சத்தகுந்த பணியாற்றும் நபர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத்தலைவர் விருது வழங்குவதைப்போல, சுதந்திர தினத்தன்று இந்த ஆண்டும் கௌரவிக்கப்படுகின்றனர்.
ஆகஸ்ட் 14, புதுடெல்லி (New Delhi): 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகெங்கும் உள்ள இந்தியர்களால் சிறப்பிக்கப்படவுள்ளது. தலைநகர் டெல்லியில் பிரதமர் தேசியக்கொடியேற்றி, குடியரசுத்தலைவர் முன்னிலையில் மாநில வாரியான அணிவகுப்பு, முப்படைகளின் கலைநிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவார். அதனைத்தொடர்ந்து, குடியரசுத்தலைவர் விருது வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. Couple Dies By Suicide: கடன் தொல்லையால் நகை வியாபாரி மனைவியுடன் தற்கொலை.. வாட்ஸ்அப்பில் அனுப்பிய உருக்கமான மெசேஜ்..!
23 பேர் தமிழர்கள்:
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறை அதிகாரிகளின் வீரதீர செயல்களை பாராட்டி வழங்கப்படும் குடியரசுத்தலைவர் பதக்க நிகழ்ச்சியில், காவல்துறை அதிகாரிகளின் தலைசிறந்த செயல்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்படும். இதன் அடையாளமாக விருதுகளும் வழங்கப்படும். அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான குடியரசுத்தலைவர் விருதை 1037 காவலர்கள் பெறுகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 2 உயர் அதிகாரிகள் உட்பட 23 காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. 2-Year-Old Child Dies: 2 வயது குழந்தை தலை சிதறி மரணம்; தாயின் அலட்சியத்தால் கண்ணெதிரே நடந்த சோகம்.!
அதிகாரிகளின் விபரம்:
அந்த வகையில், டிஜிபி வன்னியபெருமாள், தாம்பரம் கால்வல் ஆணையர் அபின் தினேஷ் ஆகிய உயர் அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது. சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் ஐஜி கண்ணன், ஏடிஜிபி பாபு, பிரவீன் குமார், பெரோஸ் கான், எஸ்பி சுரேஷ் குமார், கிங்ஸ்டன், சியாமளா தேவி, கே. பிரபாகர், பாலாஜி சரவணன், ஏடிஎஸ்பி ராதாகிருஷ்ணன், டிஎஸ்பி டில்லி பாபு, மனோகரன், ஸ்டீபன், காவல் ஆய்வாளர் சந்திரசேகர், சந்திரமோகன், தமிழ்செல்வி, உதவி ஆய்வாளர்கள் முரளிதரன், ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.