ஆகஸ்ட் 14, திருப்போரூர் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் (Thiruporur), தண்டலம், செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரியன் (வயது 35). இவர் ஆலந்தூரில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். பிரியனின் மனைவி ஜானகி (வயது 30). தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவரின் அன்புக்கு அடையாளமாக ஜோயல் என்ற 4 வயது மகனும், சைலா என்ற 2 வயது மகளும் இருக்கின்றனர்.
எமனாக வந்த பள்ளி வாகனம்:
சமீபத்தில் ஜோயல் தண்டலம் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் யுகேஜி (UKG Student) வகுப்பில் சேர்ந்து இருக்கிறார். இவரை பள்ளிக்கு அழைத்துச்சென்று, பின் மீண்டும் வீட்டிற்கு வர பள்ளி சார்பில் வாகனமும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் 30 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பள்ளி வாகனம் குழந்தைகளை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து வந்தது. NTK Supporter Arrested: திருச்சி எஸ்.பி வருண் குமாரை அவதூதாக பேசி கொலை மிரட்டல்; நா.த.க நிர்வாகி கைது.!
மகளை கவனிக்காமல் நடந்த சோகம்:
ஜோயல் வேனில் இருந்து இறங்கிய நிலையில், அவரின் தாய் ஜானகி மகனை எதிர்திசைக்கு வந்து வீட்டிற்கு அழைத்துச்சென்று இருக்கிறார். 2 வயது குழந்தை சைலா தாயுடன் பின்னாலேயே வந்த நிலையில், இதனை ஜானகி கவனித்ததாக தெரியவில்லை. இதனால் மகன் ஜோயலை இடுப்பில் தூக்கியவாறு வேனின் பின்பக்கம் சென்று வீட்டிற்கு சென்றுள்ளார். தாயின் பின்புறம் வந்த குழந்தை, அம்மா வீட்டிற்கு சென்றதை கவனித்ததும் வேனின் முன்பக்கம் வழியே வீட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை:
குழந்தையை யாருமே கவனிக்காத நிலையில், வாகனம் இயக்கப்பட்டதால் 2 வயது குழந்தையின் தலையில் வேன் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த துயரத்தில் குழந்தை நிகழ்விடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை நேரில் பார்த்த ஜானகி அலறித்துடித்துப்போனார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைனருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் செந்தில் கைது செய்யப்பட்டார்.
கைக்குழந்தைகளை வீட்டில் வைத்திருப்போர், அவர்களை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டியது அவசியம். நமது சிறு நம்பிக்கையும், குழந்தைகளின் விபரமறியாத மனத்தால் பெரும் துயரத்தை விளைவித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.