Tamil New Year Wish by Anand Mahindra: தமிழினமே சிறப்பிக்கும் தமிழ்ப்புத்தாண்டு 2024: வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மகேந்திரா..!
அந்த வகையில், தமிழக இளைஞர்களின் முன்மாதிரியாக இருக்கும் ஆனந்த் மகேந்திரா தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
ஏப்ரல் 14, மும்பை (Mumbai): ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழியின் சிறப்புகளை நினைவுகூறவும், தமிழர்களின் பாரம்பரியத்தை அக்னியின் அனுகிரகத்துடன் தொடங்கி வைக்கவும் சித்திரை மாதம் (Chithirai Month) முதல் நாள் தமிழ் புத்தாண்டாக (Tamil New Year) உலகெங்கும் வாழும் தமிழர்களால் சிறப்பிக்கப்படுகிறது. சூரிய நாட்காட்டியின்படி மேஷ ராசியில் சூரிய பகவான் தோன்றும் மாதம், தமிழ் மாதங்களின் படி புத்தாண்டின் (Tamil Puthandu) தொடக்கமாக கருதப்படுகிறது. கிரேக்க நாள்கட்டியின்படி ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டாக (சித்திரை 01) கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் தமிழர்கள் காலையிலேயே எழுந்து உணவு சமைத்து முன்னோர், தெய்வங்களை வழிபட்டு பின் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். Tamil New Year 2024 Images & Puthandu 2024 Wishes: புதிய கனவுகளை சுமக்கும் நமக்கு, புத்தாண்டின் தொடக்கம் நன்மையை வழங்கட்டும்! இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆனந்த் மகேந்திராவின் (Anand Mahindra) தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்து: அதனைத்தொடர்ந்து, தங்களின் நண்பர்கள் மற்றும் உற்றார்-உறவினர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியுடன் புத்தாண்டை புத்தாடை உடுத்தி வரவேற்பார்கள். வசதிப்படைத்தோர் இன்றைய நாளில் தங்களால் இயன்ற உதவிய ஏழை-எளிய மக்களுக்கு செய்தல் கூடுதல் நன்மையை அளிக்கும். தமிழர்களின் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் இந்நாளில் பலரும் தங்களின் வாழ்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம், செழிப்பு, மகிழ்ச்சி, வெற்றி, நிறைவு ஆகியவற்றை தர வாழ்த்துகிறேன்" என வாழ்த்தினை பதிவு செய்து இருந்தார். மகேந்திர நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. Puthandu Vazthukal 2024: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.. நீங்கள் விரும்பும் புத்தாண்டு வாழ்த்துக்கள் இதோ.!
ஆனந்த் மகேந்திரா பற்றி சுருக்கமாக: விண்வெளி, வேளாண் வணிகம், வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள், கட்டுமான உபகரணங்கள், பாதுகாப்பு, விவசாய உபகரணங்கள், நிதி - காப்பீடு, தொழில்துறை உபகரணங்கள், தகவல் தொழில்நுட்பம், தளவாடங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் சில்லறை விற்பனை ஆகிய பன்முக தொழில்களை உலகளவில் மேற்கொண்டு வரும் ஆனந்த் மகேந்திரா, இந்தியாவின் முதன்மை தொழிலதிபர்களில் ஒருவராவார். உலகளவில் தலைறைந்த தொழிலதிபர்களின் நன்மதிப்பைப்பெற்ற, மக்களுக்காக தன்னால் இயன்ற உதவியை செய்யும் கொடையுள்ளம் கொண்ட ஆனந்த் மகேந்திரா பத்ம பூஷன் விருதும் பெற்றவர் ஆவார். தனது இளவயது கல்வியை இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் நிறைவு செய்திருந்தார். உலகளவில் கவனிக்கப்படும் ஆனந்த் மகேந்திரா, தமிழ்நாடு மக்களின் கவனத்தை பெற்ற, தமிழக இளைஞர்களின் முன்மாதிரியாக திகழும் இந்திய தொழிலதிபர்களின் குறிப்பிடத்தக்கவரும் ஆவார். Tamil New Year 2024: தமிழர் புத்தாண்டு அன்று செய்ய வேண்டியது என்ன?.. 2024 தமிழ் புத்தாண்டு முழு விபரம் இதோ.!