Demise of TN Scientist: தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்: கவுண்டவுகளின் குரல் நிசப்தமானது.!

இஸ்ரோவில் விண்கலங்கள் ஏவுவதற்கு கவுண்டன் குரல் கொடுத்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார். இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் தலைவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

ISRO Scientist Valarmathi (Photo Credit: Twitter)

செப்டம்பர் 4, ஸ்ரீஹரிகோட்டா (India News): சந்திரயான்-3 (Chandrayaan 3) உட்பட பல்வேறு விண்கலங்களை ஏவும்போது கண்டவனுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த  விஞ்ஞானி வளர்மதி. 64 வயதாகி இருக்கும் இவர் உடல்நல குறைபாடு காரணமாக சென்னையின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாரடைப்பால்  உயிரிழந்தார்.

அரியலூர்  மாவட்டத்தைச்  சேர்ந்த இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொலைத்தொடர்பு (Electronics and Communication) துறையில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் 1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் (ISRO) பணிக்குச் சேர்ந்தார். Rishabh Pant feels Grateful: ‘நான் வெளிச்சத்தை பார்க்க தொடங்கி விட்டேன்’: நம்பிக்கையூட்டும் ரிஷப்-இன் இன்ஸ்டாகிராம் பதிவு.!

இன்சாட் 2ஏ (Insat 2A), ஐஆர்எஸ் ஐடி (IRS ID), ஐஆர்எஸ் ஐசி (IRS IC), உட்பட பல்வேறு திட்டங்களில் பணியாற்றி இருக்கிறார். கவுண்டவுன் மட்டுமல்லாது வானத்தின் தெளிந்த நிலை மற்றும் விண்கலம் சென்றடைந்த தூரம் போன்றவற்றை இவர் அறிவிப்பார்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ரிசாட் 1 (RISAT 1) க்கு திட்ட இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு, மறைந்த ஜனாதிபதி எபிஜே அப்துல் கலாம் (APJ Abdul Kalam) அவர்களின் பெயரில் தமிழக அரசாங்கம் வழங்கிய  விருதைப் பெற்றார்.

இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் டாக்டர் வெங்கட கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இனி இஸ்ரோவின் எதிர்கால பயணங்களில் வளர்மதி அவர்களின் குரல் இடம் பெறாது என்பது மிகவும் வருத்தம் தருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now