Rishabh Pant (Photo Credit :Twitter)

செப்டம்பர் 4, இந்தியா (Sports News): ரிஷப் பண்ட் (Rishabh Pant) இளம் வயதிலேயே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்து தனது அசாத்தியமான திறமையை நிரூபித்தார். கடந்த ஆண்டு இறுதியில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வில் இருந்த இவர் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

எல்லா இடங்களிலும் கைத்தடியோடு வந்ததால் இவர் இந்த ஆண்டு போட்டிகளுக்கு திரும்ப சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, யாருடைய உதவியும் இல்லாமல் நடக்கும் வீடியோ ஒன்றை ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். Nokia 5G Smartphone: 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது நோக்கியா; சிறப்பம்சங்கள் குறித்த அட்டகாசமான தகவல் இதோ.!

பிறகு பெங்களூருவில் இருக்கும்  கிரிக்கெட் அகாடமியில்  காயமடைந்த மற்ற வீரர்களுடன் இணைந்து  பயிற்சி மேற்கொண்டார். பிசிசிஐ (BCCI)  அமைப்பு ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும்  விக்கெட் கீப்பிங் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்களை வெளியிட்டது.

சமீபத்தில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர் வேகப்பந்து வீச்சாளரின் ஒரு பந்தை டவுன் தி டிராக் வந்து  விளாசி அடித்தார். அந்த வீடியோ அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது.

 

View this post on Instagram

 

A post shared by Rishabh Pant (@rishabpant)

இந்நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாகிங் பயிற்சி  செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த பதிவில், “நான் இருட்டில் இருந்து மீண்டு வெளிச்சத்தை காணத் தொடங்கிவிட்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.