Women Died While Paragliding: சேப்டி பெல்ட்டை சரிவர அணியாததால் இளம்பெண்ணுக்கு நடந்த பரிதாபம்; பாராகிளைடிங் பயணம் இறுதிப்பயணமான சோகம்.!
தனது கணவருடன் குலுமணாலி சென்ற பெண்மணி பாராகிளைடிங் செய்தபோது, பயிற்சியாளர் சரிவர சோதித்து அனுப்பாத காரணத்தால் இளம்பெண்ணின் உயிர் பலியானது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பிப்ரவரி 13, குலு (Himachal Pradesh News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்காரெட்டி மாவட்டம், சஹீராபாத் பகுதியை சேர்ந்தவர் சாய் மோகன். இவரின் மனைவி நவ்யா (வயது 26). தம்பதிகள் இருவரும் மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் ஜோடிகள் ஆவார்கள். திருமணம் செய்துகொண்ட இவர்கள் மகிழ்ச்சியாக தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் ஜோடி ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள குலுமணாலிக்கு இன்பச்சுற்றுலா சென்றுவர முடிவெடுத்துள்ளது.
அலட்சியத்தால் நடந்த சோகம்: இருவரும் அங்குள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றிப்பார்த்த நிலையில், நவ்யா பாராகிளைடிங் செய்ய ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அங்கு பணியாற்றும் நபர்களின் உதவியுடன்பாராகிளைடிங் செய்துகொண்டு இருந்துள்ளார். அவரின் பாதுகாப்பு கவச (Safety Belt) பட்டையை சரிவர சோதிக்காமல் அலட்சியமாக பயிற்சியாளர் அனுமதி இருக்கிறார். இதனால் நடுவானில் இருந்து கீழே விழுந்த நவ்யா, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். Video- Plane Crash on Highway: தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கிய விமானம்; 2 விமானிகள் பலி., 3 பேர் படுகாயம்.!
கண்ணீரில் கதறிய கணவர்: அதுவரை தன்னுடன் ஆனந்தமாக இருந்த மனைவி கண்முன் உயிரற்று கிடப்பதை கண்டு அதிர்ந்துபோன சாய் மோகன், மனைவியின் உடலை பார்த்து கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், நவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
கவனம் தேவை மக்களே: சுற்றுலாத்தலங்களில் ஆபத்தான சாகசங்களை மேற்கொள்ளும்போது, கவனமுடன் செயல்படுவதே நமது உயிரை பாதுகாக்க உதவும். சிறு அலட்சியமும், அதீத நம்பிக்கையும் நமது இன்பசுற்றுலாவை இறுதிசுற்றுலாவாக மாற்றும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்து செயல்பட வேண்டும். அங்கு பணியாற்றும் ஊழியர்களும் அதனை கவனத்துடன் எடுத்துக்கொண்டு செயல்படுவதே இவ்வாறான விபத்துகளை குறைக்க வழிவகை செய்யும்.