IT Employee Suicide: மேம்பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை.. காரணம் என்ன..?

சென்னை, மீனம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து ஐடி ஊழியர் தற்கொலை (IT Employee Suicide) செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IT Employee Suicide: மேம்பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை.. காரணம் என்ன..?
IT Employee Suicide in Chennai (Photo Credit: @sunnewstamil X)

ஆகஸ்ட் 07, மீனம்பாக்கம் (Chennai News): சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மீனம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். எலி பேஸ்ட்டில் பல் துலக்கிய இளைஞர் துடிதுடித்து பலி.. கோவில்பட்டியில் சோகம்.!

ஐடி ஊழியர் தற்கொலை:

விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட நபர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாலாஜி தாக்கு (வயது 39) என்பது தெரியவந்தது. இவர், குரோம்பேட்டை சாந்தி நகரில் வசித்து வந்துள்ளார். இவருக்கு, மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில், பணியில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக வீட்டில் அடிக்கடி புலம்பியுள்ளார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார். இதனால், அவர் தற்கொலை (Suicide) செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.

(The above story first appeared on LatestLY on Aug 07, 2025 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).