பிப்ரவரி 13, புளோரிடா (World News): அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், நேற்று அங்குள்ள நபேல்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் பயணம் செய்துகொண்டு இருந்தன. அச்சமயம் வானில் 5 பயணிகள் 2 விமானிகள் உட்பட 7 பேர் குழுவுடன் சிறியரக I-75 விமானம் (Florida Plane Crash) பறந்தது. நடுவானில் விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறினை சந்தித்து, விமானியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. சுதாரித்த விமானி அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை பத்திரமாக இறக்க முயற்சித்தபோதிலும், தொடர்ந்து வாகனங்கள் சென்றதால் நெடுஞ்சாலையோரம் உள்ள புல்வெளி பகுதியில் விமானத்தை தரையிறக்கினார். Accident On Yamuna Expressway: மதுரா அருகே கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.. பற்றி எரியும் வாகனங்கள்.. 5 பேர் உயிரிழப்பு!
புளோரிடாவில் தொடரும் சோகம்: அச்சமயம் விமானம் விழுந்து நொறுங்கி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் படுகாயமடைந்தார். விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சிய பயணிகள் 5 பேரில் மூவர் காயமின்றி தப்பினர், இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமீபகாலமாகவே புளோரிடா மாகாணத்தில் அதிக விமான விபத்துகள் நடைபெற்று வருவது உள்ளூர் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
WATCH: New video shows Friday's plane crash on I-75 in Naples, Florida pic.twitter.com/M8EvNtgcxv
— BNO News (@BNONews) February 12, 2024