Actress Lakshmi Menon Case (Photo Credit : Instagram)

ஆகஸ்ட் 28, எர்ணாகுளம் (Cinema News): கடந்த 2011-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய ரகுவிண்டே சுவந்தம் ரசியா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இவர் அதனை தொடர்ந்து தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க, மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பு பெற்றார். கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை தமிழக ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் செயல்பட்டு வரும் மதுபான விடுதியில் நடிகை லட்சுமி மேனனின் தரப்புக்கும், ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.‌ Nivetha Pethuraj Marriage: நீண்ட நாள் காதலனை கரம்பிடிக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.. விரைவில் திருமணம்.! 

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு :

இந்த வாக்குவாதமானது கைகலப்பாக மாறவே, அவர்கள் ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. மதுபான விடுதியில் மது அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதமானது மோதலில் முடிந்து அவரை பழிவாங்கும் வகையில் காரில் கடத்தி சென்று தாக்குதல் (IT Employee Kidnapping Case) நடத்தியதாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து ஐடி ஊழியரை கடத்தி சென்ற மிதுன், அனீஷ் மற்றும் சோனா மோல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் நடிகை லட்சுமிமேனனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருந்த நிலையில் அவர் தலைமறைவானார்.

பாலியல் ரீதியதாக துன்புறுத்தியதாக ஜாமீன் மனு :

இதனால் தலைமறைவான நடிகையை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தில் லட்சுமி மேனன் தரப்பில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அந்த ஜாமீன் மனுவில், ஐடி ஊழியர் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தான் பாரை விட்டு வெளியேறிய பின்னும் தன்னை பின் தொடர்ந்து பீர் பாட்டிலால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி ஊழியர் தாக்கப்பட்டதாக கூறியது உண்மை இல்லை என்றும், தான் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை நடிகை லட்சுமிமேனனை கைது செய்ய தடை விதித்து, ஓணம் பண்டிகைக்கு பின் வழக்கு பரிசளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.