ஆகஸ்ட் 27, எர்ணாகுளம் (Cinema News): கடந்த 2011-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய ரகுவிண்டே சுவந்தம் ரசியா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இவர் அதனை தொடர்ந்து தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க, மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பு பெற்றார். கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை தமிழக ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் செயல்பட்டு வரும் மதுபான விடுதியில் நடிகை லட்சுமி மேனனின் தரப்புக்கும், ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. Captain Prabhakaran: கேப்டன் விஜயகாந்தை கண்டதும் கதறி அழுத பிரேமலதா, விஜய பிரபாகரன்.. கண்கலங்க வைக்கும் வீடியோ.!
ஐடி ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு :
இந்த வாக்குவாதமானது கைகலப்பாக மாறவே, அவர்கள் ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. மதுபான விடுதியில் மது அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதமானது மோதலில் முடிந்து அவரை பழிவாங்கும் வகையில் காரில் கடத்தி சென்று தாக்குதல் (IT Employee Kidnapping Case) நடத்தியதாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து ஐடி ஊழியரை கடத்தி சென்ற மிதுன், அனீஷ் மற்றும் சோனா மோல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விரைவில் கைது செய்யப்படுவாரா?
இந்த வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். இதனால் தலைமறைவான நடிகை லட்சுமிமேனனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.