Three Doctors Suspended: இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர்.. தகன மேடையில் உயிர்த்தெழுந்த அதிர்ச்சி சம்பவம்.., 3 மருத்துவர்கள் சஸ்பென்ட..!
ராஜஸ்தானில் மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர், இறுதி சடங்கின் போது திடீரென எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 23, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு (Jhunjhunu) மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஹிதாஷ் குமார் (வயது 25). வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான (Handicapped) இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே, அவரின் உறவினர்கள் அவரை ஜுன்ஜுனு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அப்போது, பணியில் இருந்த மருத்துவர்கள் யோகேஷ் ஜாகர், நவ்நீத் மீல், பிஎம்ஓ டாக்டர் சந்தீப் பச்சார் ஆகியோர் ரோஹிதாஷ் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து அவருக்கான இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. Woman Murder: பெண்ணை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய காதலன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.., நடந்தது என்ன..?
இந்நிலையில், இறுதியில் தகனம் (Cremation) செய்வதற்கு கொண்டு சென்று அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போது, அவர் உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இருந்துள்ளது. உடனே, ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், உயிரோடு இருந்த ஒருவரை முறையாக பரிசோதிக்காமல் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள் 3 பேரையும் மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இதோ: