ஏப்ரல் 07, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டித்தொடரில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் முடிவில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 16 வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து திரில் வெற்றி அடைந்தது. நேற்று குஜராத் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தது. இன்று 20வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Mumbai Indians Vs Royal Challengers Bengaluru IPL 2025) அணிகள் மோதுகின்றன. Mohammed Siraj & Sai Kishore: அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்திய சிராஜ், சாய் கிஷோர்..! குஜராத் அணிக்கு 153 ரன்கள் இலக்கு.!
இந்தியன்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் (Indian Vs Royal Challengers):
இரவு 07:30 மணியளவில் மும்பை வான்கடேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) ஆகியவற்றில் நேரலையில் காணலாம். நடப்பு சீசனில் இதுவரை 3 போட்டியில் மோதி 2ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3 வது இடத்தில் உள்ள பெங்களூர் அணியும், 4 போட்டியில் மோதி 1ல் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்தில் இருக்கும் மும்பை அணியும் இன்று பலப்பரீட்சை நடக்கிறது. சென்னை - பெங்களூர், சென்னை - மும்பை போல, மும்பை - பெங்களூர் அணியின் ஆட்டமும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி யாருக்கு என்பதை இன்று இரவில் தெரிந்துகொள்ளலாம்.