ஏப்ரல் 06, ஹைதராபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் (Sunrisers Hyderabad Vs Gujarat Titans IPL 2025) அணிகள் மோதுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங் தேர்வு செய்தது. முதலில் பௌலிங் செய்த குஜராத் அணி சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியது. இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. SRH Vs GT: ஐபிஎல் 2025: இன்று குஜராத் - ஹைதராபாத் அணிகள் மோதல்.. எங்கு? எப்போது? மேட்ச் அப்டேட் இதோ.!
சன்ரைசர்ஸ் எதிர் டைட்டன்ஸ்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் 18 ரன்கள், இஷான் கிஷான் 14 பந்துகளில் 17 ரன்கள், நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்துகளில் 31 ரன்கள், அணிகித் வர்மா 14 பந்துகளில் 18 ரன்கள், பேட் கம்மிஸ் 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 152 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் முகமது சிராஜ் 4 விக்கெட், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இன்றைய ஆட்டத்தில் சிராஜ் மற்றும் சாய் கிஷோரின் பந்துவீச்சு மற்றும் விக்கெட் கவனிக்கப்பட்டது.