ஏப்ரல் 07, நெல்லை (Cinema News): ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இப்படம், 10 ஏப்ரல் 2025 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் உலகளவில் திரைக்கு வருகிறது. படத்தின் ஓஜி சம்பவம் (OG Sambavam), காட் ப்ளஸ் யு (God Bless U) ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிரைலரும் வெளியாகி கவனிக்கப்பட்டது. படத்தின் வெளியீடுக்கு 3 நாட்களே இருப்பதால், ரசிகர்கள் வெளியீடை கொண்டாட தயாராகி வருகின்றனர். பல இடங்களில் முன்பதிவு தொடங்கிவிட்டது. Good Bad Ugly: குட் பேட் அக்லி படத்தின் ட்ரைலர் எப்படி?.. பார்த்துப்பார்த்து செதுக்கிய படக்குழு.. வெளியான தகவல்.!
நொறுங்கி-வளைந்து விழுந்த இரும்பு சாரம்:
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நடிகர் அஜித் குமாரின் பிரம்மாண்ட அளவிலான கட்-அவுட் ஏற்றப்படும் என மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி சில இலட்சங்கள் செலவில் அதற்கான பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்றது. நேற்று அதற்கான பணிகள் நடந்து அஜித்தின் முகம் முதற்கட்டமாக மேலே ஏற்றப்பட்டது. அப்போது, இரும்பு சாரத்தின் தூண்கள் பாரம் தங்களது போல தோன்றியுள்ளது. மேலும், காற்றும் அதிகமாக இருந்துள்ளது. இதனால் மேலே இருந்த பணியாளர்கள் உடனடியாக கீழே வரவழைக்கப்பட்டனர். சில நொடிகளில் கட்-அவுட் பெயர்ந்து சரிந்து விழுந்தது. இந்த பதறவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. நல்வாய்ப்பாக யாருக்கும் சிறுகாயம் கூட ஏற்படவில்லை.
கட்-அவுட் சரிந்து விழும் காட்சிகள்:
Namaku yethuku intha vela!!🤦♂️
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 6, 2025
நல்வாய்ப்பாக அசம்பாவிதம் நடக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது:
நாங்கள் வருந்துகிறோம் 💔
இயற்கைக்கு மாறாக காற்றழுத்தம் அதிகம் இருந்ததையே அறிந்தோம் உடனடியாக அனைவரையும் இறங்க வைத்தோம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.
200 நபர்கள் சொந்த உழைப்பால் ஆனா பலலட்சம் வீணானது இருப்பினும் எங்கள் விடாமுயற்சி தோற்காது ❤️#GoodBadUgly pic.twitter.com/p0mU0o3QmB
— TIRUNELVELI AFC (@TIRUNELVELIAFC) April 6, 2025