ஏப்ரல் 07, ஆழ்வார்பேட்டை (Chennai News): சட்டவிரோத பணப்பரிமாற்றம் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சமீபத்தில் அமலாக்கத்துறை பல முக்கிய புள்ளிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலும் அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. குடும்பச்சண்டையில் கொடூரம்.. உறங்கிக்கொண்டிருந்த மனைவி எரித்துக்கொலை.!
அமலாக்கத்துறை சோதனை:
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள 7 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி நகர் உட்பட 7 இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. டிவிஎச் கட்டுமானம் மற்றும் சூரிய மின்சக்தி நிறுவனத்திலும் சோதனை நடக்கிறது. ஒரு நொடிதான்.. தந்தையுடன் பேசியபடி உயிரை விட்ட கல்லூரி மாணவி.. உயிரைப்பறித்த எமன்.!
கே.என் நேருவின் மகன், சகோதரர் வீட்டில் சோதனை:
இந்த நிறுவனங்கள் திமுக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரன், மகன் கே.என் அருண் ஆகியோருக்கு தொடர்புடைய நிறுவனங்கள் ஆகும். கே.என் ரவிச்சந்திரன், கே.என் அருண் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதலாக அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2017ல் ரவிச்சந்திரன் தொடர்புடைய நிறுவனத்தில் சோதனை நடந்து ரூ.100 கோடி வரை பணம் கைப்பற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.