Bullet Train India: 508 கி.மீ தூரத்தை 2 மணிநேரத்தில் கடக்க, யதார்த்தத்தை நெசவு செய்வோம் - இந்தியாவின் புல்லட் இரயில் அசத்தல் வீடியோ உள்ளே.!

பல புதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்கவுள்ள புல்லட் இரயில் மாதிரி வீடியோ ஒன்றை மத்திய அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். எதிர்கால இந்தியாவுக்கான அடித்தளத்தை மத்திய இரயில்வே விரைவில் அறிமுகம் செய்கிறது.

Mumbai to Ahmedabad Bullet Train (Photo Credit: @AshwiniVaishnaw X)

பிப்ரவரி 14, புதுடெல்லி (New Delhi): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை - குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் (Mumbai Ahmedabad Bullet Train) நகரையும் இணைக்கும் வகையில், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அதீத வேகம் கொண்ட பயணத்திற்கு புல்லட் இரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான பணிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 508 கி.மீ தூரத்தை 2 மணிநேரத்தில் அல்லது 2 மணிநேரத்திற்குள் கடக்க புல்லட் இரயில் உதவி செய்யும். ரூ.1.08 இலட்சம் கோடி செலவில் தயாராகி வரும் புல்லட் இரயில் வழித்தடத்தில், இந்தியாவியேயே முதல் முறையாக சுவாப் டிராக் சிஸ்டம் எனப்படும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 24 ஆற்றுப்பலன்கள், 28 எஃகு பாலங்கள், 7 மலை சுரங்கங்கள், கடலுக்கு அடியில் 7 கி.மீ நீளத்தில் சுரங்கம் ஆகியவை இடம்பெற்று இருக்கின்றன. Women Raped by Rowdy: கண்ணீருடன் உதவிகேட்ட பெண்ணை கற்பழித்த ரௌடி; திருச்சியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்.! 

விரைவில் இந்தியா முழுவதும் புல்லட் இரயில் சேவை: சர்வதேச தரத்தில் ஜப்பானின் புல்லட் இரயில் 320 கி.மீ வேகத்தில் இயங்கும் வகையில் உருவாகும் வழித்தடம், எதிர்கால இந்திய இரயில் பயணங்களுக்கான அடித்தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த பொறியியல் அற்புதத்தை உணர்த்தும் வகையில் புல்லட் இரயில் முதல் வழித்தடம் அமைகிறது. ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் முதலீடு உதவியுடன் நடைபெறும் இப்பணிகள், விரைவில் நாடு முழுவதும் வெவ்வேறு வழித்தடங்களில் நடைபெறுகிறது. இதனால் இந்தியாவின் முக்கிய நகரங்களை விரைந்து இணைக்கும் பிரதான இரயில் சேவையாக புல்லட் இரயில் சேவை தரம் உயர்ந்து பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Kanguva Update: வெளியீடுக்கு தயாராகும் சூர்யாவின் கங்குவா திரைப்படம்; இறுதிக்கட்ட படத்தொகுப்பு பணிகள் தீவிரம்..! அசத்தல் கிளிக் இதோ.! 

அசரவைக்கும் வீடியோ வெளியீடு: இந்நிலையில், மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "நாம் யதார்த்தத்தை நெசவு செய்கிறோம், கனவுகளை அல்ல" என்ற தலைப்புடன் கீழ்காணும் விடியோவை பகிர்ந்து இருக்கிறார். புல்லட் இரயில் வழித்தடத்தில் அமையவுள்ள பாலங்கள் மற்றும் புல்லட் இரயிலின் வேகம் தொடர்பான காட்சிகள் இதில் இடம்பெற்று இருக்கின்றன.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement