Friendship Marriage: "இரு உள்ளங்கள் இணையும் ஆரம்பம் திருமணம்.." ஜப்பானில் வைரலாகும் நட்பு திருமண கலாச்சாரம்..!
ஜப்பானில் உள்ள இளைஞர்கள் ஒரு புதிய வகை திருமண உறவை தற்போது நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர்.
மே 10, டோக்கியோ (Tokyo): ஜப்பானில் உள்ள இளைஞர்கள் ஒரு புதிய வகை திருமண உறவை தற்போது நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர். இந்த வகையான உறவில் இருக்க அன்பு அல்லது உடல் ஈடுபாடு தேவையில்லை. இந்த புதிய ட்ரெண்ட், நட்பு திருமணம், என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானில் ஆயிரக்கணக்கான மக்கள், துல்லியமாக 120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த வகையான உறவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் வேற்று பாலினத்தவர்களும் அடங்குவர்.
நட்பு திருமணம்: இந்த வகையான திருமணத்தில் உள்ள தம்பதிகள் ஒருவருக்கொருவர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வார்கள். மேலும் அவர்கள் உடலுறவு மற்றும் காதல் உறவுகளைத் தவிர்ப்பார்கள். குழந்தைகளைப் பெறபெறுவதற்கான செயற்கையான வழிகளைத் தேர்வு செய்கிறார்கள். மேலும் இந்த வகையான உறவில் இருக்கும்போது அவர்கள் மற்றவர்களுடன் காதல் உறவுகளை வைத்திருக்க முடியும். ஓரினச்சேர்க்கை அல்லது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் பொதுவாக நட்பு திருமணத்தையே அதிகம் நாடுகிறார்கள். Delhi Excise Policy Case: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்.. உச்சநீதிமன்ற உத்தரவு..!
Colorus என்ற நிறுவனம், இதுகுறித்த ஆய்வுத் தகவல் ஒன்றினைப் பகிர்ந்துள்ளது. அதன்படி, 2015 முதல், ஜப்பானில் சுமார் 500 பேர் இந்த வகையான திருமணத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தை உருவாக்கியுள்ளனர். பாரம்பரிய திருமண முறைகளைத் தவிர்த்து, குழந்தைகளையும் வளர்க்கிறார்கள்.