Arvind Kejriwal (Photo Credit: @ani X)

மே 10, புதுடெல்லி (New Delhi): டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சியில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில், புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த கொள்கையின் படி, 32 மண்டலங்களாக டெல்லியை பிரித்தனர். மேலும் அங்குள்ள 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றது. மேலும் அந்த சமயம் புதிய மதுபான கொள்கை ஊழலில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது: தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் நிலையில், தனது கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். TN Weather Report: இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

உச்சநீதிமன்ற உத்தரவு: இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்றும், முதல்வராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் ஜூன் 2 ஆம் தேதி சரணடைய வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.