Northern Lights Seen in Ladakh: லடாக்கில் தோன்றிய அரோரா ஒளிவிளைவு; சூரியபுயலால் வானியல் அதிசியம்.!
ஏஆர்13664 எனப்படும் பகுதியில் இருந்து வெளியேறிய சூரிய புயல் பூமியை நொடிக்கு 800 கி.மீ வேகத்தில் கடந்து வருகிறது.
மே 11, புதுடெல்லி (New Delhi): சூரியனில் உண்டான சூரியப்புயல் (Solar Storm), நெடுந்தூரத்தை கடந்து புவியின் காந்தப்புலத்திற்கு வந்துள்ளது. இதனால் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தினால், உயரமான இடங்களில் அரோரா (Aurora) எனப்படும் ஒளிவிளைவும் நிகழ்கிறது. சூரியனில் ஏஆர்13664 எனப்படும் பகுதியில் இருந்து வெளியேறிய வெடிப்பை தொடர்ந்த புயல், பூமியை நோக்கி நொடிக்கு 800 கி.மீ வேகத்தில் வருகிறது. இந்த அதிக சக்தி கொண்ட சூரிய மின்காந்த புயல், தொழில்நுட்ப ரீதியாக செயற்கைகோள்கள் மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றுக்கு சேதங்களை விளைவிக்கும். Coconut Milk Rasam Recipe: தேங்காய் பால் ரசம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
உலகளவில் தோன்றிய அரோரா: கடந்த மே 11 ம் தேதி தொடங்கி இன்று இரவு வரை சூரியப்புயல் பூமியை கடந்து செல்லலாம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், பூமியின் உயரமான இடங்களான ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவாக்கியா, ஐஸ்லாந்து, சுவிச்சர்லாந்து, டென்மார்க், போலந்து உட்பட பல இடங்களில் வடக்கு வெளிச்சம் (Northern Lights) எனப்படும் அரோரா ஒளிவிளைவு (Aurora Effect) நிகழந்தது. சூரிய புயல் வளிமண்டலத்துடன் வினைபுரிந்து ஏற்படும் நிறம் மாறிய வான் தோற்றம் அரோரா என அழைக்கப்படுகிறது. இதற்கு வடக்கு விளக்குகள் என்ற பெயரும் உண்டு. Drunken Man Suicide After Killing Family Members: குடிபோதையில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை..!
லடாக்கில் ஒளிவிளைவு: இந்நிலையில், இந்தியாவில் இமயமலைத்தொடரில் அமையப்பெற்றுள்ள லடாக் உட்பட பிற பகுதிகளில், நள்ளிரவு 1 முதல் 3.30 மணிவரையில் அரோரா விளைவு தொடர்ந்தது. பலரும் இதனை வெறும் கண்களால் கண்டுகளித்தனர். வளிமண்டலத்தில் வெப்பத்தின் விளைவால் ஏற்படும் அரோரா நிகழ்வு வானியல் விந்தைகளில் ஒன்றாக அறிஞர்களால் கவனிக்கப்படுகிறது. அதேவேளையில், சூரிய புயல் புவியில் இருந்து செலுத்தப்பட்டுள்ள செயற்கைகோள்களை சேதப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன என்பதால் கவலையையும் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.