Earth Hottest Year 2024 (Photo Credit: Pixabay)

ஜனவரி 10, வாஷிங்க்டன் டிசி (World News): உலகப்போர்களின் நிறைவுக்குப்பின்னர் ஒவ்வொரு நாடும் தொழில் வளர்ச்சி ரீதியாக போட்டிகளை தொடங்கி செயல்பட்டு வந்த நிலையில், முயற்சி & பிழை அடிப்படையில் பல்வேறு விஷயங்களை செய்தன. இதில் மேலை நாடுகள் தங்களின் நாடுகளில் மேற்கொண்ட தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைகளில், சத்தமான விஷயங்களை தனக்குள் வைத்துக்கொண்டு, பாதகமான விஷயங்களை வெளிப்புற நாடுகளில் வைத்துக்கொண்டது. இதனால் வானிலை, காலநிலைகளில் மெல்லமெல்ல மாற்றம் உண்டாகத் தொடங்கி, இன்றளவில் அதன் விளைவுகளை நாமும், உலகமும் எதிர்கொண்டு இருக்கிறோம்.

உலகளவில் வெப்பம் உயர்ந்தது:

அந்த வகையில், 2024ம் ஆண்டு சர்வதேச அளவில், உலகின் வெப்பமான (Earth Hottest Year 2024) ஆண்டு என்ற தகவல் வெளியாகியுள்ளது. வானிலை & காலநிலை அமைப்புகளும் இந்த தகவலை உறுதி செய்துள்ளன. கடந்த 2024ம் ஆண்டின் சராசரி வெப்பநிலை, 2023ம் ஆண்டின் சராசரி வெப்பநிலையை எளிதில் கடந்து இருக்கிறது. ஐரோப்பா, ஜப்பான் வானிலை ஆய்வு தரவுகளின்படி, கடந்த 1800ம் ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையை கடந்து இருந்தது. அதேபோல, கடந்த ஆண்டில் 1.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பமயமாதல் விளைவு உணரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஜப்பான் ஆய்வு மையம் 1.57 டிகிரி, பிரிட்டிஷ் 1.53 டிகிரி வெப்பநிலை உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. Gold Holding Limit: இந்தியாவில் ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? நகை பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க.! 

பசுமை இல்ல வாயுக்கள்:

கடந்த 1800 - 1850 இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட அளவை விட, அதிகமான வெப்பநிலை என்ற அளவை 2024 உறுதி செய்துள்ளது. நிலக்கரி, எண்ணெய், எரிவாயு எரிப்பு போன்ற காரணத்தால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல (Green House Gases) வாயுக்கள் குவிந்ததே வெப்பநிலை அதிகரிக்க முதன்மை காரணம் என வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காண்பிக்கின்றனர். இதனால் கடலின் வெப்பநிலையும் அதிகரித்து, பனிப்பாறைகள் உருகி கடல் மட்டும் உயருகிறது.

வெப்பத்தினால் ஏற்படும் அழிவுகள் தொடரும்:

கடந்த 10 ஆண்டுகளில் பதிவான தரவுகளின் அடிப்படையியல் வெப்பமான ஆண்டாகவும், ஒட்டுமொத்தமாக 1,25,000 ஆண்டுகளில் மிகவெப்பமான ஆண்டாகவும் 2024 அமைந்துள்ளது. இதில் ஜூலை மாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் உலகின் வெப்பநிலை அதிகம் பதிவு செய்யப்டள்ளது. புதைபடிவ எரிபொருட்களை இருப்பதனால் இவ்வாறான விஷயங்கள் நடப்பதாகவும், மத்திய பசுபிக் பகுதியில் நிலவும் எல்-நினோ வெப்பமயமாதல் விளைவுகளும் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஸ்பெயின் வெள்ளம், கலிபோர்னியா காட்டுத்தீ போன்றவற்றின் தாக்கம், கொஞ்சம் எஞ்சி இருப்பதால், உடனடியாக வானிலை செயல்பாடுகளை எதிர்காலத்தில் மாற்ற நடவடிக்கை வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.