ஜனவரி 17, மும்பை (Technology News): வீட்டின் அருகில் இருக்கும் கடைகள் முதல் மொபைல் ரீசார்ஜ், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற ஒடிடி தளங்கள் வரை அனைத்தின் விலையும் 99,149,199 என்று 99 என முடியும் எண்ணாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது காலம் காலமாக பின்பற்றப்படும் விற்பனை யுக்தியாக பின்பற்றப்படுகிறது.
99 விற்பனை யுக்தி ():
மக்கள் எவ்வளவு விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும் கூட அது தேவையெனில் கட்டாயம் பேரம் பேசியாவது வாங்குவார்கள். சில நேரம் அத்தியாவசிய பொருட்களாக இல்லாமல் இருந்தாலும் கூட சலுகைகள், தள்ளுபடிகளில் விற்பனை செய்யத் தொடங்கினால் வாங்கி விடுவார்கள். சந்தையில் 100 , 500 , 1000 என பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை பெரிய தொகையாகவே மக்கள் பார்ப்பார்கள். ஆனால் அதை கடைகளில் 99, 199, 999 என்றே ஒரு ரூபாய் குறைவில் விற்றால் அது பெரிதாக இருக்காது. 99, 199 இது போன்ற பொருட்கள் பார்ப்பதற்கு மலிவான விலையாக கருதுகின்றனர். இதை பயன்படுத்தியே இந்த விலைகளில் பொருட்கள் விற்கப்படுகிறது. ஏனெனில் இவைகள் விலை குறைவாக தோன்றுவதால் தேவையில்லையெனினும் குறைவாக உள்ளபோதே வாங்கிவிடுவோம் என்று எண்ணி வாங்கிவிடுவர். Buying A Home In 2025: 2025ல் சொந்த வீடு கட்ட போறீங்களா? அப்போ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.!
சந்தைப்படுத்தல் (Marketing):
இது போல தான் பண்டிகை காலங்களிலும் பொருட்கள் விற்படுகிறது. இது சிறிய பொருட்கள் என்றில்லாமல் டிவி, லேப்டாப், போன்கள், நகைகள் அனைத்திலும் குறைவாக்கி விற்கின்றனர். மேலும் இது போன்று 99 க்கு பொருளுக்கு வாங்கியவர்கள் மீதியை பெரும்பான்மையானோர் வாங்குவதில்லை. இது அதிகம் பெரிய கடைகளில் நடக்கிறது. மேலும் 200, 300 ரூபாய் குறைவுகளிலும் இதே மாறி யுத்தி பயன்படுத்தி தான் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதுவும் ஒரு வகை மார்கெட்டிங் தான்.