Vaseline Beauty Hacks: தலை முதல் கால் வரை... பொலிவேற்றும் வாஸ்லின்..!
வாஸ்லினை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜனவரி 05, சென்னை (Chennai): வாஸ்லின் என்பது சருமம் மற்றும் உதடு வறட்சிக்கும் அனைவரும் பயன்படுத்தும் ஒரு வகை ஜெல் ஆகும். அழகு சாதனங்களும் கிரீம்களும் அழகை தருகிறதோ இல்லையோ சருமத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த வாஸ்லின் அனைத்து விதத்திலும் தீமை ஏற்படுத்தாமல் நன்மையை அளிக்கிறது. வாஸ்லின் எண்ணெய் போன்ற தன்மை கொண்ட பெட்ரோலியம் ஜெல்லி ஆகும். இது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சருமத்தில் வறட்சியையும், எரிச்சல் அடங்குவதற்கும், காயங்களை குணமாக்குவதற்கும் இந்த வாஸ்லினைப் பயன்படுத்தலாம். இதை சருமத்திலும் கூந்தலிலும் பயன்படுத்தலாம். வாஸ்லின் இவைகளுக்கு ஈரப்பத்தை அளித்து பாரமரிக்கிறது. இவைகளை எந்த வகைகளில் உபயோகிக்கலாம் என சில டிப்ஸ்களை வழங்குகிறோம். Earthquake In Mizoram: மிசோரமில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு..!
உதடு அழகு: வாஸ்லினை ரெகுலராக உதடிற்கு தடவ வேண்டும். வறட்சி தன்மை, தோல் உரிதல், வெட்டுகள், சொரசொரப்பைக் குறைக்கிறது. மேலும் இதை லிப்ஸ்டிக் அப்ளே செய்யும் போது உதடுகளின் மேல் வாஸ்லின் அணியலாம். இது சாஃப்டான க்ளாஸி லிப்ஸை கொடுக்கிறது. இரவு மேக் அப் ரிமூவ் செய்த பின் உதட்டில் வாஸ்லினை தடவுவது நல்லது.
இமை மற்றும் புருவம்: கண்ணின் இமை முடி வளர்வதற்கும் இந்த வாஸ்லின் உதவுகிறது. லேசாக இதை எடுத்து கைகளில் தேய்த்து இமை முடிகளில் மெதுவாக மேல் நோக்கி தடவ வேண்டும். இமைகள் உதிராமலும், சாஃப்டாகவும் இருக்கும். அதோடு புருவம் குறைவாக இருப்பவர்களும் அடிக்கடி புருவத்தில் இதை தடவ வேண்டும். மேலும் அடர்த்தியான புருவம் இருந்தால் இதைப் பயன்படுத்தி மிருதுவாக மாற்றலாம். Senthil Balaji Case: செந்தில் பாலாஜியின் பதவி என்ன ஆனது?.. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு..!
காயங்களை குணப்படுத்துகிறது: இந்த வாஸ்லின் ஜெல்லி காயங்கள் தழும்புகளை குணப்படுத்தி சருமத்தை பாதுகாக்கிறது. நகை, புடவை, செருப்பு அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் சருமத்தில் காயம், சிவந்து போதல் அல்லது கருமை ஏற்படும். இவைகளை சரி செய்ய வாஸ்லினை அவ்வப்போது தடவ வேண்டும்.
ஸ்பிளிட் எண்ட் தடுக்க: பல பெண்கள் ஸ்பிளிட் எண்டினால் அவதிப்படுவர். அவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறையாக இவைகளை வெட்டி விட வேண்டும். அப்போது தான் இது முடி முழுவதும் வராமல் இருக்கும். இதற்கு அதிக செலவும் ஆகும். இதைத் தடுக்க வாஸ்லினைப் பயன்படுத்தலாம். இந்த ஜெல்லிகள் முடிகளில் சிறிதளவு தடவுவதால் இந்த ஸ்பிளிட் எண்ட்கள் தடுப்பதுடன், முடியை வறட்சி இல்லாமலும் பார்த்துக் கொள்ளும். Viral Video: ஒரு நொடியில் உயிர் தப்பிய சாலையோர வியாபாரி... திடுக்கிடும் வீடியோ..!
முகத்தில் ஃபேஸ் பேக் அணிகையில் இதை அரை ஸ்பூன் சேர்த்துக் கொள்லலாம். முதலில் தினமும் தடவிவர முகத்தில் பருக்கள் தழும்புகள் நீங்கும். மேலும் சருமத்தில் வாஸ்லினை மாய்சுரைசராக பயன்படுத்தலாம். இது வறண்ட சருமம் உடையவர்கள், பனிகாலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்க வாஸ்லின் மிகச் சிறந்தது. இது சருமத்தை ஈரப்பதமாகவே வைத்திருக்கிறது. தோல் சுருக்கம் ஏற்படுவதையும் தடுக்கிறது. தினமும் உடல் முழுவதும் பாடி லோஷனாக பயன்படுத்தலாம்.
ஹேவி அண்ட் லைட் எந்த மேக் அப் ஆக இருந்தாலும் அவைகளை ரிமூவ் செய்வது கொஞ்சம் கடினம் தான். குறைந்த செலவில் இந்த பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தி எளிமையாக ரிமூவ் செய்யலாம். மேலும் இது சருமத்தை ரிமூவ் செய்த பின் மென்மையாக வைக்கும். சிறிய காட்டனில் இதை எடுத்து ரிமூவ் செய்யலாம். Yellow Alert: 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
மேக் அப் செய்து கொள்ளும் போது பொலிவாக இருக்க வாஸ்லினைப் பயன்படுத்தலாம். முகத்திற்கு வாஸ்லினை லேசாக அப்பளே செய்துவிட்டு மேக் அப் போடுவது நீண்ட நேரத்திற்கு நீடிக்கும். அதே போல பர்ஃபியூம் நீண்ட நேரம் நீடிக்க, கழுத்து கைகளில் வாஸ்லின் தடவி விட்டு பர்ஃபியூம் அடித்தால் நீண்ட நேரம் இருக்கும்.