Pakistan Skipper Fatima Sana Uses Bug Spray (Photo Credit: @Kanika_Says X)

அக்டோபர் 05, கொழும்பு (Cricket News Tamil): இலங்கையின் கொழும்புவில் இன்று இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs Pakistan Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி மாலை 3 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் வீராங்கனைகள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். INDW Vs PAKW Cricket: டாஸ் வென்று பாக்., பௌலிங் தேர்வு.. ஐசிசி மகளிர் உலகக்கோப்பை: இந்தியா Vs பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் போட்டி..! 

இந்தியா எதிர் பாகிஸ்தான் (IND Vs PAK Women's Cricket Match):

பாகிஸ்தான் அணியினரும் பந்துவீச்சில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி இருக்கின்றனர். இதனால் இந்திய அணி தடுமாறினாலும் ரன்கள் குவிப்பில் கவனமாக இருக்கிறது. இந்நிலையில், போட்டியின்போது பாகிஸ்தான் அணியின் பாத்திமா சனா பூச்சி தொல்லை இருந்ததால் மைதானத்தில் பூச்சி மருந்தை அடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் இந்திய அணியை கேலி செய்யும் நோக்கத்துடன் இவ்வாறு செயல்பட்டாரா? எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

பாத்திமா சானாவின் செயலால் ரசிகர்கள் அவரை பெண் ஆஸிம் முனீர் என கூறுகின்றனர்: