Simple Mehndi Design Ideas: மெஹந்தி வைக்காம தீபாவளி பண்டிகையா? இதோ உங்களுக்கான லேட்டஸ்ட் மெஹந்தி டிசைன்.!
மெஹந்தி டிசைன்கள் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் நிறைவடையாது.
அக்டோபர் 24, சென்னை (Fashion Tips): திருமணம், ரம்ஜான், தீபாவளி (Diwali), பொங்கல் என எந்த பண்டிகையாக இருந்தாலும் கைகளில் மருதாணி வைக்காமல் எந்த ஒரு பண்டிகையும் முழுமையடையாது. ஏனென்றால், மருதாணி வைப்பது தற்போதைய காலகட்டத்தில் ஒரு காலாச்சாரமாகவே மாறிவிட்டது. இப்போதெல்லாம் பெண்கள், மெஹந்தி டிசைனரிடம் சென்று புது புது டிசைன்களில் மெஹந்தி (Simple Mehndi Design) போட்டு விழாக்காலங்களில் கலக்குகின்றனர். எளிமையாக வீட்டிலேயே அழகான மெஹந்தி போடலாம். தானாக மெஹந்தி போட்டுக்கொள்பவர்கள் முதலில் பேனாவில் லேசாக டிசைன் வரைந்து கொண்டு பின்பு மருதாணியில் வரையலாம். Cape Dresses: ராயல் லூக் தரும் கேப் கவுன்கள்.. இந்த தீபாவளிக்கு இப்படி வாங்குங்க.!
உள்ளங்கை:
இந்த டிசைன்களை அனைவருமே எளிமையாக வரையலாம். நிறைய டிசைன்கள் வரைய வேண்டும் என்று அலங்கோலப்படுத்தாமல் சிறிய டிசனை அழகாகப் போடலாம்.
பின்புற கை:
பின்புற கையில் டிசைன்கள் சற்று தள்ளி தள்ளி இருக்குமாறும் எளிமையாகவும் மெஹந்தி போடலாம். இவ்வாறான டிசைன்கள் விழாக்கள் முடிந்து ஆஃபீஸ் செல்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.