
மார்ச் 19, திட்டக்குடி (Cooking Tips): ஒவ்வொரு நாளும் வீட்டின் சமையல் என்பது, மிகப்பெரிய விஷயங்களில் ஒன்றாகி இருக்கிறது. அதிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் நபர்கள் இருக்கும் வீடுகளில், காலை உணவு என்பது எப்போதும் போராட்டத்துக்கு மத்தியில் தான் இருக்கும். குழந்தைக்கு பிடித்த உணவு, கணவர்/மனைவிக்கு பிடித்த உணவு என காலை 4 மணிக்கு மேல் அடுப்பை பற்றவைத்தால், அதனைத்தொடர்ந்து 4 மணிநேரம் மிகுந்த பரபரப்பு நிலையுடன் காணப்படும். இதனாலேயே தினமும் காலை என்ன செய்வது? என்ற சந்தேகமும், குழப்பமும் நிலவும். இவ்விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இன்றளவில் விதவிதமான சோறு வகைகள் வந்துவிட்டன. அந்த வகையில், இன்று சுவையான வெங்காய முட்டை சோறு செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள். Summer Tips: கொளுத்தும் வெயிலால் தவிக்கிறீங்களா? உடல் சூடு குறைய அருமையான மோர் கரைசல்.. செய்வது எப்படி?
வெங்காய முட்டை சோறு செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 3,
முட்டை - 2,
கறிவேப்பிலை & கொத்தமல்லி - சிறிதளவு,
தேங்காய் துருவல் - 1 கப்,
எண்ணெய் & உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1 கரண்டி,
மிளகாய் தூள் - 1 கரண்டி,
காஷ்மீரி தூள் - நிறத்துக்காக 1/2 கரண்டி (விருப்பம் இருப்பின்)
மிளகு தூள் - 1 கரண்டி,
சாதம் - 2 கப்,
செய்முறை:
- முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயத்தின் தோலை நீக்கி, நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். Banana Benefits: தினமும் இரவில் ஆண்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?
- பின் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்க வேண்டும். இவை வதங்கியதும் மிளகாய்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
- மறுபக்கம் முட்டையை உடைத்து கிண்ணத்தில் ஊற்றி, அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து அடித்து எடுத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் தயாராகிக்கொண்டு இருக்கும் கலவையுடன், முட்டையை அடித்து ஊற்ற வேண்டும். பின் அவை முட்டை பொடிமாஸ் பதத்திற்கு வரும் வரையில் கிளற வேண்டும்.
- இறுதியாக சாதம் சேர்த்து, கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான வெங்காய முட்டை சோறு தயார்.
Recipe Thanks: Prema Kanagaraj