
மார்ச் 23, சென்னை (Cooking Tips): வீட்டில் இருக்கும் குட்டீஸுக்கும், வேலைக்கு செல்லும் நபர்களுக்கும் ஒரே மாதிரியான எலுமிச்சை சாதம் கொடுத்து வருத்தப்படுகிறீர்கள் என்றால், இல்லத்தரசிகளே உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது. எலுமிச்சை சாதத்தை மாறுபட்ட வகையில் செய்து சாப்பிட்டு, அதன் ருசியை நீங்களும் - உங்களின் குடும்பத்தினரும் கொண்டாடுங்கள். இன்று மசாலா எலுமிச்சை சாதம் (Masala Lemon Rice) செய்வது எப்படி என காணலாம். Summer Tips: கோடை வெயிலின் தாக்கத்தால் பாதிப்பா? அருமையான தீர்வு தரும் வெங்காயம்.. விபரம் இதோ.!
செய்யத் தேவையான பொருட்கள்:
கடுகு, உளுந்தம்பருப்பு - 1 கரண்டி,
கடலைப்பருப்பு - 2 கரண்டி,
முந்திரி - 5,
வரமிளகாய் - 2,
வெங்காயம் - 1,
வேர்க்கடலை - 2 கரண்டி,
கறிவேப்பில்லை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லி தழைகள் - சிறிதளவு,
சீரகம் - 1 கரண்டி,
எலுமிச்சை - 1,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1 கரண்டி,
தேங்காய் - 1/2 கரண்டி அல்லது 1 கரண்டி,
பூண்டு - 2 முதல் 4 பற்கள்,
செய்முறை:
- முதலில் மிக்சியில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, சீரகம், தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சை சாறு எடுத்து, அதில் மஞ்சள் தூளை கலந்து வைத்துக்கொள்ளவும்.
- பின் வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு-உளுந்து, கடலை பருப்பு, வரமிளகாய், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.
- இதனுடன் அரைத்து வைத்த கலவையை சேர்த்து லேசாக கிளறி, பின் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்க வேண்டும். சாறு லேசாக வற்றும் பதம் வரும்போது, தேவையான அளவு சாறு சேர்த்து கிளறி, கொத்தமல்லி தழைகள் தூவி இறக்கினால் சுவையான மசாலா லெமன் சாதம் தயார்.
Recipe Thanks: Prema Kanagaraj