Business (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 14, புதுடெல்லி (Technology News): சொந்த தொழில் செய்தால் தான் அதிக வருமானமும் ஈட்ட முடியும், வருங்காலத்திற்காக சேர்த்து வைக்கவும் முடியும் என்று இன்று பலரும் அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு சொந்த தொழில் செய்ய ஆரம்பிக்கின்றனர். ரிஸ்க் எடுத்து சொந்த தொழில் செய்பவர்கள் பலரும் வெற்றியைக் கண்டு வருகின்றனர். இருப்பினும் எந்த தொழில் ஆரம்பித்தாலும் அதை குறைவான முதலீட்டில் ஆரம்பிக்க வேண்டும். ஒரு நல்ல வேலையில் இருக்கும் போது அதை விட்டு வந்து தொழில் தொடங்காமல் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது பகுதி நேரமாக குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

ரூ. 20,000 முதல் ரூ.40,000 என குறைந்த முதலீட்டில் சிறு தொழில் தொடங்கி வருமானம் ஈட்டலாம். உங்களுக்கு எந்த ஃபீல்டில் அதிகமாக ஆர்வம் உள்ளதோ அல்லது உங்கள் பகுதிக்கும் நேரத்திற்கும் ஏற்றது எது என்று பார்த்து தேர்ந்தெடுத்து தொழில் தொடங்க வேண்டும். எந்த தொழிலாக இருந்தாலும் நிலையான உழைப்பை கொடுக்க வேண்டும். Veterinary Doctor App: விவசாயிகளுக்கான "கால்நடை மருத்துவர் செயலி”.. முக்கிய அம்சங்கள் என்ன?

பரிசு மற்றும் கலை பொருட்கள்:

இதில் பல விதங்களில் சிறிய கலை பொருட்கலை செய்யலாம். உதாரணமாக பொம்மைகள் தயாரிப்பு, பாட்டில் ஆர்ட், ஓவியங்கள் வரைதல், நகைகள் வடிவமைத்தல், மண்பொருட்கள் செய்தல், கைவினைப்பொருட்கள். இது போன்ற பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இத்தொழில்களை சிறிய முதலீட்டில் இதை ஆரம்பித்துவிடலாம். இந்த வீட்டு அலங்கார மற்றும் கைகளால் செய்யப்பட்டப் பொருட்களை மக்கள் ஆன்லைனில் தேடிச் சென்று வாங்கி வருகின்றனர். உங்கள் படைப்புகளில் புதிய உத்திகளை புகுத்தியும், சரியான விளம்பரப்படுத்தி விநியோகிக்கும் திற்மை இருந்தால் மட்டும் போதுமானது.

உணவுப்பொருட்கள்:

சிறிய அளவில் உணவுப்பண்டங்கள் தயாரிக்கலாம். உதாரணமாக ஊறுகாய் செய்வது, மசாலா போடுவது, மாவு அறைத்து விற்பது, குழம்பு விற்பனை, அப்பளம், வடகம், கடலை மிட்டாய், தேன் மிட்டாய், முறுக்கு போன்ற தின்பண்டங்கள் செய்வது போன்றவைகளுக்கு அதிக முதலீடு தேவைப்படுவதில்லை. தற்போது பெரு நகரங்களில் சமைப்பதற்கான காய்கறிகளை நறுக்கி பாக்கெட் போட்டு சிறு கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இதன் வாடிக்கையாளர்களாக வேலைக்கு செல்வோர் இருக்கின்றனர். காய்கறிகள் வாங்கி வேலைக்கு செல்லும் அவசரத்தில் நறுக்கி சமைக்க நேரமில்லாதவர்கள் இதையே தேர்ந்தெடுக்கின்றனர். சிறிய அளவில் நஷ்டம் ஏற்படாமல் செய்து வாடிக்கையாளர்கள் வந்த பின் தேவைகேற்ப சிறிது சிறிதாக அதிகப்படுத்தலாம்.

மூலிகைப்பொடி:

நகரங்களில் சமீபகாலமாக இந்த மூலிகை பொடிகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. உங்களுக்கு பிரண்டை, கற்றாழை, முருங்கை, தூதுவளை, துளசி, முடக்கத்தான் என அனைத்து வகையான மூலிகை இலைகளை எடுத்து காயவைத்து அரைத்து பொடி செய்து விற்பனை செய்யலாம். உங்கள் பகுதில் இந்த செடிகள் இருந்தால் அதை பறித்து செய்யலாம் அல்லது வீடுகளிலேயெ இதை வளர்க்கலாம். அதற்கான பாக்கெட்டுகள் கொரியர் சார்ஜ் மட்டுமே செலவாக இருக்கும்.

சோப் மற்றும் வாசனை பொருட்கள்:

மக்களிடையே ஆர்கானிக் சோப்களில் அதிக கவனம் திரும்பி இருக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு ஆர்கானிக் சோப்களைத் தயாரிக்கலாம். குறந்த முதலீட்டில் ஆரம்பித்து மெதுவாக கற்றுக் கொண்டு இதை பக்குவமாக செய்தால் அதிக லாபம் ஈட்டலாம். மேலும் அகர்பத்திகள், சாம்பராணி, வாசனைத் திரவங்கள் செய்யலாம்.

ஆன்லைன் வொர்க்:

டிக்கெட் புக் செய்வது பான், பாஸ்போட் அப்பளை செய்வது, அரசு வேலைகளுக்கு விண்ணப்பிப்பது, ரீசார்ஜ், கரண்ட் பில், டிவி ஈசி செய்வது போன்ற ஆன்லைனில் செய்யப்படும் வேலைகள் செய்யலாம். இதற்கு லேப்டாப், இண்டர்நெட், மற்றும் இதையெல்லாம் எவ்வாறு செய்வது என்ற அடிப்படை அறிவு இருந்தால் போதுமானது. வீட்டில் பகுதி நேரமாக இதையெல்லாம் செய்யலாம். மேலும் தங்களுடைய ஃபீல்டில் இணையதளத்தில் வெபினார்களாக மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். Rental Agreement: வீட்டு வாடகை ஒப்பந்தம் போடுவது ஏன்? கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!

தினைப்பொருட்கள்:

கம்பு, ராகி, கேழ்வரகு, போன்ற தினைப்பொருட்களையும், பாரம்பர்டிய அரிசிகளையும் மாவக்கியோ அல்லது அதிலிருந்து இனிப்புகள், சத்துமாவுகள் போன்றவனவாகவும் செய்து பாக்கெட் போட்டு விற்கலாம். அல்லது இவைகளை சரியான அளவுகளில் எடுத்து மிக்ஸாக பாக்கெட் செய்தும் விற்கலாம். தினை பொருட்களில் விற்கும் இனிப்புகள் கடைகலில் அதிக விலைக்கே விற்கப்படுகிறது. மேலும் ராகி கோதுமை போன்ற பொருட்களில் நூடுல்ஸ், முருக்கு என வித்தியாசமாக செயவது உங்களின் வியாபாரத்தை அதிகப்படுத்தலாம்.

சாக்லேட் மற்றும் கேக்:

ஹோம்மேட் சாக்லேடுகள் எப்போது விலையுயர்வாக இருந்தாலும் அனைவரும் அதை தேடிச் சென்று வாங்குகின்றனர். சாக்லேட்கள், கேக்கள் செய்வது அதிக லாபம் ஈட்டும் தொழிலாக இருக்கிறது. இதை செய்வது பற்றி நன்கு அறிந்து கொண்டு தனக்கென்று தனித்துவமாக ஒரு உக்தியில் சாக்லேடுகள் செய்து விற்பனை செய்யலாம். சுற்று வட்டார பகுதியில் சிறியதாக ஆரம்பித்து வாடிக்கையாளர்கள் பிடிக்கலாம்.

லேஸ் & பட்ஸ்:

ஷூ லேஸ்கள் மற்றூம் காட்டன் பட்ஸ்கள் மிக குறைவான முதலீட்டில் செய்யும் தொழிலாகும். இவைகளை தயாரிப்பதும் சுலம். மூலப்பொருட்களின் விலையும் குறைவாக ஆன்லைனில் கிடைகின்றன. மேலும் மிஷின்களும் குறைவாக கிடைக்கின்றன. மேலும் இவைகளையும் ஆன்லைனில் விற்பனை செய்ய முடியும். பள்ளிக்கூடங்கள், விளையாட்டுக்கூடங்கள், பெரிய காலணி தயாரிப்பு நிறுவங்களுடன் ட்டையப் வைத்துக் கொள்ளலாம்.

தையல்:

தையல் தெரிந்திருந்தால் போதும் துணி தைப்பதை தாண்டி துணிப்பைகள், துணி பொம்மைகள் தைக்கலாம். துணிப்பைகளின் தேவைகள் அதிகமாக உள்ளது. துணிக்கடைகளில் ஆர்டர்கள் எடுத்தும் ஆன்லைனிலும் உங்கள் பொருட்களை விற்கலாம். மேலும் பல பொம்மை தயாரிக்கும் நிறுவனங்களில் பொம்மைகளுக்கான துணிகள் தைக்கலாம். இதை செய்பவர்கள் குறைவு என்பதால் இந்த தொழிலில் அதிக ஆர்டர்களை எடுக்கலாம். மேலும் ஹேர் பேண்ட், குழந்தைகளுக்கான சாக்ஸ் போன்றவையும் தயாரித்தும் விற்கலாம்.

பேப்பர் பொருட்கள்:

மக்கும் வகையான பொருட்கள் செய்து விற்பனை செய்யலாம். அதாவது பேப்பரில் தட்டு, ஸ்பூன் போன்றவையை செய்யலாம். இதற்கான இயந்திரங்களும் குறைவான விலையில் கிடைக்கின்றன. மேலும் அட்டைகள் வாங்கி அட்டைப் பெட்டிகளாகவும், பேப்பர் பைகளாகவும் செய்து விற்கலாம். இதற்காக துணிக்கடைகள் ஹோட்டல்களை வாடிக்கையாளர்களைப் பிடிக்கலாம். மேலும் வேஸ்ட் பேப்பர்களை வைத்து துண்டு துண்டாக நறுக்கி விற்கப்படும் பேங்கிங் பேப்பர்கள் தற்போது பகுதி நேரத் தொழிலாக பலராலும் செய்யப்பட்டு வருகிறது. இது பழைய பேப்பர்களை வாங்கி செய்யப்படுவதால் மூலப்பொருளுக்கான செலவு மிகக் குறைவு. இதற்காக தேவை பேங்கிங் கம்பனிகளும், பார்சல் கொரியர் சர்வீஸ் செண்டர், பீங்கான், கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கிஃப்ட் கடைகளிலும் அதிகமாக இருக்கிறது. இதற்கு பேப்பர் ஷெர்டர் மிஷின் மட்டும் வாங்கி வைத்தால் போதும் இது ஆன்லைனில் குறைவாக கிடைக்கின்றது.

பகுதி நேர தொழில்கள்:

மொத்த விலையில் பொருட்களை வாங்கி வீட்டின் அருகில் விற்கலாம். துணிகள், நகைகள், அழகு சாதனப்பொருட்கள், பிளாஸ்டிக் பொருகள் என அனைத்தையும் வாங்கி விற்கலாம். இதற்கு கடைகள் தனியாக தேவைப்படுவத்தில் வீடுகளில் வைத்தே விற்காலம். இதை பகுதி நேரமாக செய்யலாம்.

ப்பை பேக்:

பை பேக் தொழில்களும் நிலையான வருமானம் ஈட்ட முடியும். இந்த தொழில் மற்றவருடன் இணைந்து செய்வது போன்றது பகுதி நேரமாக இந்த தொழிலில் ஈடுபடலாம். இதற்கென்றே பல நிறுவனங்களும் செயல்படுகின்றன. உதாரணமாக மெழுகுவர்த்தி செய்வது, பேப்பர் பிளேட், ஹேர் பேண்ட் செய்வது. இதற்கான மூலப்பொருட்களையும், தேவையான இயந்திரங்களையும் அந்தந்த நிறுவனங்கள் வீடுகளுக்கு சென்று கொடுத்து பயன்படுத்தும் முறை பற்றியும் விளக்கி தருகின்றனர். மேலும் பொருட்களை செய்த பின் நேரடியாக வந்து வாங்கிக் கொள்கின்றனர். இது போன்று ஏதாவது தொழில் ஒரு 6 மாத காலம் பயிற்சி எடுத்துவிட்டு அதை தொழிலாக எடுத்து செய்யலாம் விற்பனைக்கான வாடிக்கையாளர்களும் சுலபமாக கிடைத்துவிடுவர்.