Astrology: செவ்வாய் தோஷம் திருமணத்தின் போது ஏன் முக்கிய தோஷமாக பார்க்கப்படுகிறது? விஞ்ஞான உண்மை என்ன?!

திருமண பொருத்தத்தின் போது செவ்வாய் தோஷம், மிகப் பெரிய அளவில் தாக்கத்தினை, சாமானிய மக்களுக்கு ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

Marriage (Photo Credit: Pixabay)

நவம்பர் 15, சென்னை (Astrology Tips): செவ்வாய் முழுமையான ஆண் கிரகம் என்பதால், தனக்கு வரப்போகும் கணவன், கட்டுமஸ்தாக கம்பீரமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் எண்ணுவது இயல்புதான். அதாவது ஆண், ஆணாக இருக்க வேண்டும். அதாவது செவ்வாயைப் போன்று கட்டுமஸ்தாக, கம்பீரமாகவும் இருக்க வேண்டும். பெண், பெண்ணாக இருக்க வேண்டும். அதாவது குடும்ப பாங்காகவும், அழகாகவும் இருக்க வேண்டும்.

விஞ்ஞானம் வளர்ந்து விட்ட, இந்த காலகட்டங்களில், உட்கார்ந்த இடத்திலிருந்தே விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்ப முடியும். ஆனால் ஜோதிடம் கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டங்களில், ஏதோ ஒரு தொழில் செய்து, குறிப்பாக உடலுழைப்பை கொண்டு, தொழில் செய்து, வருமானம் ஈட்டக்கூடிய அமைப்பைக் பெற்றிருக்கலாம். உடல் வலிமையை குறிக்கும் கிரகமும் ,ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தான்.

செவ்வாய் தோஷம்: தான் ஆசையாக வளர்த்த மகளை, மற்றொருவனுக்கு மணமுடித்து கொடுக்கும் பொழுது, கடைசிவரை, கண்ணீர் சிந்தாமல் இருக்க வேண்டும் என்பது தான், ஒவ்வொரு தந்தையின் அதிகபட்ச கனவாக இருக்க முடியும். படிப்பறிவு இல்லாவிட்டாலும், உடல் உழைப்பை வைத்தாவது பிழைக்கும் அமைப்பை செவ்வாயே கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் பெண்ணுக்கு பாதுகாப்பு வேலியாகவும், கணவனே இருக்க முடியும் என்பதால், கணவன் கட்டுமஸ்தாக இருக்க வேண்டும் என்று எண்ணி ,செவ்வாயை இந்த அமைப்பிற்குள் கொண்டு வந்திருக்கலாம். TNSTC: அடித்தது ஜாக்பாட்! அரசு பேருந்தில் முன்பதிவு செய்து பயணிக்கப் போறீங்களா? அப்போ குலுக்கல் முறையில பரிசு வரப்போகுது..!

செவ்வாய் ஒரு ஜாதகத்தில் வீரியத்துக்கும் காரக கிரகம். ஒரு ஜாதகத்தில் செவ்வாய் முற்றிலும் கெடும் பொழுது, தைரிய வீரியம் போன்றவை கண்டிப்பாக பாதிக்கப்படும். செவ்வாய் சனி இணைந்து இருப்பது, ராகுவுடன் நெருக்கமாக இணைவது, செவ்வாய் புதன் இணைவது போன்றவை செவ்வாய்க்கு பல குறைவுதான். நீச செவ்வாய் சனி, நீச செவ்வாய் ராகு,அஸ்தமன செவ்வாய், போன்றவை லக்னத்திற்கு 7ம் இடம், எட்டாம் இடங்களில் இருக்கும் பொழுது ,கண்டிப்பாக திருமண வாழ்வில் பிரச்சினையை கொடுக்கும்.

ரிஷப லக்கினத்திற்கு மூன்றாம் இடத்தில், இந்த அமைப்பு இருந்தால் சகோதர உதவியும் இருக்காது. வீரிய ஸ்தான குறைபாடுகளும் கண்டிப்பாக இருக்கும். பயந்தாங்கொள்ளியாக இருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அதைவிட முக்கியமாக திருமண பொருத்தத்தின் போது, செவ்வாய், எந்த லக்னத்திற்கு, என்ன ஆதிபத்திய, காரக பலன்களைப் பெற்று பலன் கொடுக்கப் போகிறது ,அந்த தசை நடைமுறையில் வருமா என்பதை எல்லாம் ஆராய்ந்து தான், பலனை தீர்மானிக்க வேண்டும்.

ஒரே வரியில், செவ்வாய் தோஷம் உள்ளது என்று குருட்டாம்போக்கில் பலன் சொல்வது மாபெரும் அபத்தம். மேஷ ,விருச்சிக லக்கனத்திற்கு செவ்வாய் தோஷம், விதிவிலக்கிலும் வரும்.