நவம்பர் 15, ஹரியானா (Sports News): இந்தியாவில் தற்போது 2024-25 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் (Ranji Trophy Elite 2024-25) தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஹரியானா - கேரள (HAR Vs KER) அணிகள் மோதின. ஹரியானா மாநில அணிக்காக வேகப் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் (Anshul Kamboj) விளையாடி வருகிறார். அவர், கேரளா அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்துவது மாபெரும் சாதனை ஆகும். WI Vs ENG 3rd T20I: ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.. வெஸ்ட் இண்டீஸ் தொடர் தோல்வி..!
ரஞ்சி டிராபி தொடரில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்திய 3வது பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்திருக்கிறார். இவர், 30.1 ஓவர் வீசி 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்களை வீழ்த்தினார். இதில் 9 மெய்டன் ஓவர்களையும் அவர் வீசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ரஞ்சி கோப்பை தொடரின் 2வது சிறந்த பந்துவீச்சையும் பதிவுசெய்து இருக்கிறார். இதற்கு முன் ரஞ்சி டிராபி தொடரில் மோகன் சட்டர்ஜி (Mohan Chatterjee) மற்றும் பிரதீப் சுந்தரம் (Pradeep Sunderam) ஆகிய இருவரும் ஒரே இன்னிங்க்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். மோகன் சட்டர்ஜி 1956-57 ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக இந்த சாதனையை செய்திருந்தார். பிரதீப் சுந்தரம் ராஜஸ்தான் அணிக்காக 1985-86 ரஞ்சி டிராபி தொடரில் இந்த சாதனையை நிகழ்த்திருந்தார்.
ரஞ்சி கோப்பை தொடரில் சிறந்த பந்துவீச்சு:
1) 10/20 - மோகன் சட்டர்ஜி - பெங்கால் Vs அசாம் (1956-57)
2) 10/49 - அன்ஷுல் கம்போஜ்* - ஹரியானா Vs கேரளா (2024-25)
3) 10/78 - பிரதீப் சுந்தரம் - ராஜஸ்தான் Vs விதர்பா (1985-86)
அன்ஷுல் கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தி சாதனை:
A VIDEO FOR AGES 📢
- ANSHUL KAMBOJ HAS TAKEN PERFECT 10 IN AN INNINGS IN RANJI TROPHY AGAINST KERALA...!!!! pic.twitter.com/ILDkytJOjG
— Johns. (@CricCrazyJohns) November 15, 2024