நவம்பர் 09, நல்பூர் (West Bengal News): கொல்கத்தாவில் உள்ள ஹௌரா - நல்பூர் பகுதியில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் இருந்து, ஷால்மினார் (Secunderabad to Shalimar Express) நோக்கி பயணம் செய்த அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. தென்கிழக்கு ரயில்வே இந்த விபத்தை உறுதி செய்துள்ள நிலையில், நல்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே இந்த விபத்து நடந்ததாகவும் தெரிவித்துள்ளது. இரயிலில் இருந்த பி1 மற்றும் பிற இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கிய நிலையில், நல்வாய்ப்பாக எந்த பயணிகளுக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. இதனால் மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெறுகிறது. அதிவிரைவு இரயில் தடம்புரண்ட காரணத்தால், அவ்வழியே இயக்கப்படும் பிற இரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. IND Vs SA 1st T20: சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்., வருணின் அபார பந்துவீச்சு.. தென்னாபிரிக்க மண்ணில் முதல் வெற்றிக்கனியை சுவைத்த இந்திய அணி.! 

இரயில் பெட்டிகள் தடம்புரண்ட காட்சிகள்:

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)