Lemon Rice (Photo Credit: YouTube)

நவம்பர் 14, சென்னை (Kitchen Tips): பெரும்பாலான வீடுகளில் எலுமிச்சை சாதம் (Lemon Rice) என்பது முதன்மையானதாகும். இது கடுகு விதைகள், சனா பருப்பு, பச்சை மிளகாய், காய்ந்த சிவப்பு மிளகாய், புதிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றுடன் முன் சமைத்த குறுகிய தானிய அரிசியை கலந்து தயாரிக்கப்படுகிறது. இது பலருக்கும் பிடித்தமான ரெசிபி ஆகும். அந்தவகையில், இந்த எலுமிச்சை சாதத்தை (Elumichai Sadam) சற்று வித்தியாசமான சுவையில் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Chettinad Mushroom Masala Recipe: மட்டன் குருமாவை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்

எலுமிச்சை - 2

கடுகு, கருவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • அடுத்து எலுமிச்சையின் சாரு சேர்க்கவும். அதனுடன், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து உடனே அடுப்பை அணைக்க வேண்டும். எலுமிச்சை சாறு சேர்த்த பின் கொதிக்க விடக்கூடாது.
  • அடுப்பை அணைத்த பிறகு தேவையான அளவு சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிவிட்டு, போதுமான பின் நிறுத்தி விட வேண்டும்.
  • அவ்வளவுதான் சுவையான எலுமிச்சை சாதம் ரெடி.