நவம்பர் 14, சென்னை (Chennai News): தமிழ்நாடு அரசு பேருந்துகளில் (TN government buses), ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், நவம்பர் 21 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி வரை அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு, குலுக்கல் முறையில் முதல் பரிசாக இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறைப்படி நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்குத் தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அதன்படி முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற 10 வெற்றியாளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். Fake Teacher Scandal: 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை? - உண்மை என்ன?.. அதிரடி விளக்கம்.!
இந்நிலையில் சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஓ.டி.ஆர்.எஸ் (OTRS) இன் கீழ் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். இது 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச்சிறப்பு குலுக்கல் முறைக்குத் தகுதி பெறும். இந்த சிறப்பு குலுக்கல் பரிசுகள், 2025ஆம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும்.
அந்த வகையில் முதல் பரிசு இரண்டு சக்கர வாகனம் ஆகும். இரண்டாவது பரிசு எல்.இ.டி (LED) ஸ்மார்ட் தொலைக்காட்சிப் பெட்டி மூன்றாவது பரிசு குளிர்சாதனப் பெட்டி ஆகும். எனவே பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களைத் தவிர்த்து எளிதாகப் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அதிக பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பரிசு@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @mp_saminathan @sivasankar1ss @arasubus #TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu #arasubus pic.twitter.com/IFUQaZP0U6
— TN DIPR (@TNDIPRNEWS) November 13, 2024