Relatives Protest on Guindy Hospital (Photo Credit: Facebook)

நவம்பர் 15, கிண்டி (Chennai News): சென்னையில் உள்ள கிண்டி, கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், புற்றுநோயியல் துறை மருத்துவர் பாலாஜி ஜெகன்நாத், நேற்று முன்தினம் 25 வயது இளைஞர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர், நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். தொடர்ந்து, அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவருக்கு கத்திக்குத்து (Doctor Stabs in Chennai):

புதிய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 25 வயது இளைஞரின் தாய் பிரேமா, புற்றுநோய் காரணமாக அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர் தனது தாயின் சிகிச்சை தொடர்பான விவகாரத்தில் அலைக்கழித்ததாகவும், ஏதேனும் கேட்டால் கோப்புகளை தூக்கி எறிந்து, ஆங்கிலத்தில் பேசியதால், ஆத்திரம் ஏற்பட்டு மருத்துவரை குத்தியதாக கைதான விக்னேஷ் வாக்குமூலம் அளித்திருந்தார்.

அரசுத்தரப்பு உறுதி:

இதனிடையே, மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணியில் இல்லை, அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்படுகிறது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப அரசு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை வளாகத்திலேயே புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. Baby Kidnapped: சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு; அரசு திட்டத்தை வாங்கித்தருவதாக பகீர் சம்பவம்.! 

மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர் பலி (Youth Dies in Guindy Hospital):

இந்நிலையில், சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 4 வயதுடைய குழந்தை இருக்கிறார். பித்தப்பை கல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த விக்னேஷ், தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினரால் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு மேற்படி சிகிச்சை பெற வசதிகள் இல்லை என்பதால், அவர் கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.

நம்பிக்கையில் விழுந்த இடி?

கடந்த அக்.13 அன்று மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட விக்னேஷுக்கு, புறநோயாளி என காகிதம் ஒன்றில் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. பின் அவருக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என உறவினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மருத்துவர்கள் போராட்டம் நடைபெறுவதால் சிகிச்சை அளிக்க இயலாது எனவும் மருத்துவர்கள் சார்பில் சொல்லவில்லை. இதனால் எப்படியேனும் விக்னேஷுக்கு சிகிச்சை கிடைத்துவிடும் என குடும்பத்தினர் இருந்துள்ளனர்.

உறவினர்கள் குமுறல்:

இவ்வாறாக இரண்டு நாட்கள் கடந்த நிலையில், விக்னேஷ் நேற்று இரவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். விக்னேஷ் உயிரிழந்தததால் அவர்கள் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

நிர்வாகம் விளக்கம்:

மருத்துவமனை நிர்வாகம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகத்தினர், விக்னேஷ் இறுதிக்கட்டத்தில் வந்தேதே மரணத்திற்கு காரணம். அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளது.