National Brother's Day 2024: "வா வா டியர்ரு பிரதர்ரு.. பார்த்தா செதறும் சுகரு.. அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும் அதுவே தனி பவர்ரு.." இனிய சகோதர தின வாழ்த்துக்கள்..!
உடன் பிறக்காவிட்டாலும் உறவாய் கிடைத்து உயிரில் கலந்த அன்பு உறவிற்கு சகோதரர்கள் தினம் நல்வாழ்த்துக்கள்.
மே 24, சென்னை (Chennai): சகோதரர்கள் நம் வாழ்வில் பிரிக்க முடியாத உறவுகள். அவர்கள் நண்பர்கள், பாதுகாவலர்கள், ரகசிய காப்பாளர்கள், எல்லாம் ஆக இருக்கிறார்கள். சகோதரர்களின் இந்த பங்களிப்பைப் பாராட்டும் விதமாக மே 24 ஆம் தேதி உலக சகோதரர் தினம் கொண்டாடப்படுகிறது.
சகோதரர்களுடன் சிறு வயதில் விளையாடிய களியாட்டுகள், பகிர்ந்து கொண்ட ரகசியங்கள், அவர்களுக்காக செய்த குறும்புகள் என பல நினைவுகள் நம் மனதில் இருக்கும். சகோதரர்கள் தரும் பாதுகாப்பு உணர்வு, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எதிர்த்து போராடும் துணிவு எல்லாம் அளப்பரியவை.
இந்த சகோதரர் தினத்தில், உங்கள் சகோதரருக்கு நன்றியை தெரிவிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம். அவர்களுடன் நேரம் செலவிடுங்கள், அவர்களுக்கு எதாவது பரிசு கொடுங்கள் அல்லது அவருடன் செய்த மறக்க முடியாத செயல்களை பற்றி பேசி அந்த நாளைக் கொண்டாடுங்கள். மேலும் கவிதைகளைப் பரிமாருங்கள். Love Couple Stunt Ride On Two Wheeler: காதலனுக்கு இச்சு கொடுத்து, இறுக்க கட்டி சாகச பயணம்; வீடியோ லீக்கானதால் வழக்கில் சிக்கிய காதல் ஜோடி.!
உங்களுக்கான சகோதர தின வாழ்த்து கவிதைகள் இதோ..
- சகோதரன் என்பவன் குழந்தை பருவத்தின் ஒரு பகுதி.
அவ்வரம் அமைய பெற்றவர்கள்,
யாரும் அதை இழக்ககூடாது.
சகோதரிகள் எங்களுக்காக நீ
பிறந்ததற்கு எங்கள் நன்றி!
- சகோதரன் என்பவன் மிகப்பெரிய பரிசு.
உன்னை எங்களுக்கு சகோதரனாய் தந்ததற்கு
கடவுளுக்கு எங்கள் நன்றி.
உன்னைப் போன்ற சகோதரன் உலகில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.
- சகோதரன் என்பவன் ஒரு
உற்றத் தோழன் வாழ்க்கையில்,
உன்னை எங்கள் சகோதரனாய்
அடைந்ததற்கு பெருமைக் கொள்கிறோம்
- கவிதைக்கு நன்றி, ராஜ்குமார்.
- தொலை தூரம் கடந்து வந்த பாதையில் தேடிப்பார்க்கிறேன்-அவனை
- தோழமையின் முழு உருவமாய் என்னை திகைக்க வைத்தவனை !
- துன்பத்தில் தோள் கொடுத்து தூக்கியவனை !
- துயரத்தில் துவண்ட போதெல்லாம் துயர் துடைத்தவனை !
- நான் அயராது உழைத்த நாழியெல்லாம் துணை நின்றவனை !
- என் முடிவுகள் எதுவாயினும் என்னோடு குரல் கொடுத்தவனை !
- சில நேரங்களில் ஆச்சிரியங்களில் என்னை திகைக்க வைத்தவனை!
- தோல்விகளால் உடைந்த போதெல்லாம் ஊக்கம் தந்தவனை !
- வெற்றிகள் நான் சில கண்டிடவே வெகு நாட்கள் தவம் இருந்தவனை !
- வேதனைகள் வேர் வரை சென்றாலும் விழுதுகளாய் என்னை தாங்கியவனை!
- என் வாழ் நாள் முழுதும் நீ இன்றி சிறு துறும்பும் அசைந்ததில்லை - என் சகோதரா !!!
- கவிதைக்கு நன்றி, ஹாசினி
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)